தமிழகம்

பணிமனைக்கு சென்ற பேருந்து மீது இருசக்கர வாகனத்தில் மோதிய முதியவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

116views
மதுரை காளவாசல் புறவழிச் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் உள்ளது இங்கு நேற்று இரவு பத்து முப்பது மணி அளவில் பேருந்துகள் ஒவ்வொன்றாக பணிமனைக்குள் வந்து கொண்டிருந்தது அப்பொழுது மதுரை கோவில் பாப்பா குடியை சேர்ந்த திருநாவுக்கரசு வயது 60 இவர் பழங்காநத்தம் இருந்து காளவாசல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது பணிமனைக்கு பணியை முடித்து பேருந்துகள் ஒவ்வொன்றாக உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பணிமனைக்கு சென்று விட்டு வந்த அரசு பேருந்து மீது பின் படிக்கட்டு பகுதியில் பலமாக இவர் மோதினார். இதில் நிலைகுலைந்த அவர் படுகாயம் அடைந்தார்.
அப்பொழுது பணி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உடனடியாக 108 அவசரகால ஊர்தி தகவல் தெரிவிக்கப்பட்டு காளவாசல் பகுதியில் இருந்த 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திடீர் நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!