தமிழகம்

பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர், இந்திய குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை கண்டித்து மாபெரும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

22views
பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் ஆர் என் ரவி, இந்திய குடியரசு துணைத் தலைவர் தக்கர் ஆகியோரை கண்டித்து மாபெரும் கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர என் எஸ் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
உச்ச நீதிமன்றத்தால் கடும் கண்டனத்திற்கு உள்ளான ஆர் என் ரவி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்துவது கண்டனத்திற்குரியது மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு அரசாங்கத்தை சவால் விடுகிற வகையில் நடைபெறுகிற இந்த மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்வது மக்களாட்சி முறைக்கே விரோதமானதாகும். ஆளுநர் ஆர் எம் ரவி வழக்கில் கிடப்பில் போடப்பட்ட 10 சட்டங்களும் உடனடியாக நிறைவேற்றலாம் என்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெளிப்படையாக விமர்சனம் செய்வது நீதி துறையை அச்சுறுத்தல் செயலாகும். என்று முழக்கமிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளர் என் கே ராஜன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எஸ் எம் ஜெயசீலன் ஆர் கருணாநிதி, பரமக்குடி நகரச் செயலாளர் கே ஆர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர்கள் ஹரிஹரன் கோட்டைச்சாமி மற்றும் எம்பி ருக்மாங்கதன், விஜயபாஸ்கர், கே ஜி நாகநாதன், கோவிந்தன், கணேச மூர்த்தி, சிவகுமார், ஆம் ஆத்மி பொறுப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!