ஆன்மிகம்

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் ஆனந்தம் தரும் தெய்வீக அற்புதங்கள்

361views
புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா வெகு விமர்சையாக உலகம் முழுவதும் உள்ள பக்தர்களால், அவர்களது அன்பு நெஞ்சத்துடன், ஆன்மீக ஆர்வத்துடன், சேவை மனப்பான்மையுடன், பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது.
புட்டபர்த்தியில் 23 நவம்பர் 1926–இல் ஈஸ்வரம்மா & பெத்த வெங்கம ராஜு தம்பதியனருக்கு, சத்தியநாராயண ராஜு என்ற பெயருடன் பிறந்த ஸ்ரீ சத்ய சாயிபாபா, “அன்பும் சேவையும்” வாழ்க்கையின் இரு புனித சக்திகள் என்பதை உணர்த்தும் வண்ணம் பல அதிசியங்கள் செய்து, உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைத்து
சனாதன தர்மத்தின் சக்தியாக “அன்பே அமைதி தரும்; சேவையே ஆனந்தம் தரும், தர்மமே (சனாதன) தெய்வீக நிலை தரும்” என்று வாழ்ந்து காட்டினார்.
உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்து பதிவு செய்துள்ள ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் தெய்வீக அற்புதங்களை, ஆழ்ந்த ஆன்மிக மரியாதையுடனும் நெஞ்சார்ந்த பக்தி மனத்தோடு வழங்குவதில் பேரானந்தம் அடைகிறேன்.

ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் முக்கிய அற்புதங்களில் சில:
1. விபூதி உருவாதல்: பாபாவின் கைகளில் இருந்து தானாகவே விபூதி அவர் பக்தர்கள் முன்னால் தோன்றியவுடன், அதை பிரசாதமாக கொடுத்து ஆனந்தம் தருவது, அவரது மிகவும் புகழ்பெற்ற அற்புதங்களில் ஒன்று.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதனை நேரில் அனுபவித்ததால், ஆரோக்கிய நன்மைகள் பெற்றதாக, நல் உறவுகள் அமைந்ததாக, ஆன்மீக அமைதி கிடைத்ததாக, ஆனந்த நிலை அடைந்ததாக கூறுகின்றனர். நானும் அந்த அற்புதங்களை இன்றும் காணும் பாக்கியசாலிகளில் ஒருவன்.
2. லிங்கம், ருத்ராட்சம், புஷ்பம் தோன்றுதல்: பிரஷாந்தி நிலையம், பக்தர்களின் வீட்டில் உள்ள சுவாமி படங்களில், வழிபடும் இடங்களில், லிங்கம், ருத்ராக்ஷம், நாணயம், மற்றும் பல வழிபாட்டு பொருட்கள் போன்றவை விபூதி பிரசாதத்துடன் தானாகவே தோன்றிய பல அனுபவங்கள் உலகம் முழுவதும் நடப்பது.
3. பொருட்கள் தானாக உருவாக்கப்படுதல். பொருள்மயமாக்கல்:
தாலி, மோதிரங்கள், செயின், தங்க சிலைகள் போன்றவை பாபாவின் கைகளில் தோன்றியவுடன், பக்தர்களுக்கே சக்தி பரிசாக கொடுத்தல் போன்றவை பலரின் வாழ்க்கையில் நல் ஆன்மீக மாற்றத்திற்கான சின்னங்களாக, இவை ஆன்மீக சக்தியின் வெளிப்பாடுகளாய் மதிக்கப்படுகின்றன.
4. விபூதி / சந்தனம் / தேன் போன்றவை சுவாமி படங்களில் தோன்றுதல்: விபூதி, மஞ்சள், சந்தனம் போன்றவைகள் தானாக வெளிப்படுவது போன்ற அதிசயங்கள் பல நாடுகளில் உள்ள பக்தர்கள் வீட்டில் நடந்ததாக வீடியோ பதிவுசெய்துள்ளனர். பலர் வீட்டில் கண்டு ஆனந்தப்பட்டு இருக்கிறேன். பக்தர்களின் கோரிக்கை கடிதங்களில் விபூதி.
5. தெய்வீக வாசனைகள் / தெய்வீக ஒளி : பஜனை, தியானம், தரிசன நேரங்களில் அரிய தெய்வீக மணம், ஒளி, அதிர்வுகள் பரவுதல் போன்ற அதிசியங்களை உணர்ந்தவர்கள் பலர் வாழ்க்கையில் பல கஷ்டங்களில் இருந்து வெளி வந்து ஆனந்தமாக வாழ்ந்து வருகின்றனர்.
6. சுவாமியின் மருத்துவ அற்புதங்கள்: புற்றுநோய், இதய நோய் போன்ற கடுமையான நோய்களில் பாதிக்கப்பட்டவர்கள்கூட சாயிபாபாவின் ஆசிர்வாதத்தால் மருத்துவ சிகிச்சை இல்லாமலே குணமான சம்பவங்கள் பல புத்தகங்களில் வந்துள்ளன. உலகப்புகழ் பெற்ற டாக்டர்களும் இந்த அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
7. தொலைவில் இருந்தே காப்பாற்றும் அற்புதம்: விபத்து, பேரழிவு, மருத்துவ ஆபத்து நேரங்களில் சாயிபாபா தொலைவில் இருந்தும் பக்தர்களை அவரது காட்சி, குரல் அல்லது அற்புதமான தலையீடு மூலம் உயிர் காப்பாற்றப்பட்டதாக பலர் அனுபவித்து கூறியுள்ளனர்.
8. அந்தர்யாமி சக்தி : அவரை நோக்கி வருபவர்களின் எண்ணம், பிரார்த்தனை என பக்தர்களின் உள்ளார்ந்த எண்ணங்களையும் உணர்ந்து எதையும் கேட்காமலேயே கூறி ஆச்சரியப்படுத்தும் அற்புத அனுபவங்களை பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பதிவு செய்து இருக்கின்றனர். மற்றும்
அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கியதன் மூலம், சாயிபாபாவின் அந்தர்யாமி சக்தியின் மகத்துவமும் அதனால் பக்தர்கள் பெற்ற ஆன்மீக வளர்ச்சியும் அற்புதமானது.
பார்த்ததாக தெரிவிப்பது, அவரின் தெய்வீக சக்திகளை காட்டுகிறது.
9. சாய் பாபாவின் சிவராத்திரி லிங்கோத்பவ அற்புதம்: சிவராத்திரி நாளில் ஸ்ரீ சத்திய சாய் பாபா வாய் வழியாக வெளிப்படுத்திய லிங்கோத்பவம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்களால் காணப்பட்ட மிகப் புனிதமான அற்புதங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. அது புலன் சாட்சியமான தெய்வீக சக்தியின் வெளிப்பாடு, ஆன்மீக ஆற்றலின் எழுச்சி, மற்றும் சிவபெருமானின் அருள் சக்தி என்று பக்தர்கள் நம்புகின்றனர். இந்த நிகழ்வு பக்தர்களின் மனதில் தீய கர்மங்களை அகற்றும் சக்தியாக, சிவதத்துவத்தின் சின்னமாக, மனிதரின் உள்ளுள்ள தெய்வீகத்தை உணர்த்தும் உபதேசமாக பார்க்கப்படுகிறது. இந்த அற்புத நிகழ்ச்சியின் அடையாளமாக 1970–2000 காலகட்ட வீடியோ, படங்கள், சாட்சியங்கள் பல உள்ளன.
10. ஆன்மீக பரிமாற்றம் : – சாயிபாபாவின் மிகப் பெரிய அற்புதம் என்பது பக்தர்கள் உள்ளுக்குள் நல்லவனாக (இயற்கை நிலை) ஆக பரிமாறுவதே. கெட்ட பழக்கங்கள் விட்டவர்கள், கோபம் குறைத்தவர்கள், வாழ்க்கை நோக்கங்களில் வெற்றிப் பெற்றவர்கள், குடும்ப உறவை மேம்படுத்திகொண்டவர்கள், வாழ்க்கையை அமைதியாக மற்றும் ஆனந்தமாக மாற்றிக் கொண்டவர்கள் மற்றும் பல அற்புதங்கங்களால் பேரின்பம் அடைந்தவர்கள் என லட்சக்கணக்கில் உள்ளனர்.
11. மேலும் பல அற்புதங்கள் : வெளிநாட்டு மொழி அறியாமலேயே அந்த மொழியில் பேசியது. கனவில் தோன்றி வழிகாட்டியது. அயல் தேசத்தில் பாபாவை தெரியாதவர்களுக்கு காட்சி கொடுத்து, தேடி வர வைப்பது என்று பல அற்புதங்கள்.
அவரால் ஆரம்பிக்கபட்ட பல முக்கிய இலவச சேவைகள் மூலம் சுவாமி இன்றும் செய்யும் அற்புதங்களை எப்படி விவரிப்பது?
12. ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் தொண்டு நிறுவனத்தின் கீழ் முக்கியமாக பல அதிநவீன மருத்துவமனைகள் மூலம் பல்வேறு நோய்களுக்கு (இதயம், புற்றுநோய், ரோபோடிக் அறுவை சிகிச்சை உட்பட) இலவசமாக மருத்துவ சேவைகளை வழங்குகிறது.

ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி மருத்துவ அறிவியல் நிறுவனம் (SSSIHMS), ஸ்ரீ சத்ய சாயி வலி நிவாரண மையம் (SSSPCC) வலி/அறிகுறி மேலாண்மைக்கு இலவச உள்-நோயாளிகள், வெளி-நோயாளிகள் மற்றும் வீட்டு பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது.
ஸ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிறுவனம் மூலம் (ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் மற்றும் முனைவர் ஆராய்ச்சி நிலைகள் வரை) இலவச கல்வி வழங்கப்படுகிறது.
மேலும் பெரிய அளவிலான குடிநீர் திட்டங்கள் மூலம் ஏராளமான கிராமங்களுக்கு சுத்தமான நீரை வழங்கி வருகிறது. பின்தங்கிய கிராம பகுதிகளில் மேம்பாட்டிக்காக பல்வேறு சமூக சேவை திட்டங்கள் தொடர்ந்து செய்து வருகிறது.
பிரசாந்தி நிலையத்திற்கு (ஆசிரமம்) வரும் பார்வையாளர்களுக்கு என இலவச தங்குமிடம், உணவு என பல்வேறு சேவைகள். மாபெரும் சமூக, ஆன்மீக, கலாச்சார திட்டங்களை பல்வேறு மையங்கள் மூலம் இன்றும் தொடர்கிறது. இந்த சேவைகள் ஸ்ரீ சத்ய சாயி சென்ட்ரல் டிரஸ்ட் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன,
இலவசமான உலகத் தரகல்வி, உயர்தர மருத்துவம், குடிநீர் திட்டங்கள், மற்றும் பல்வேறு சமூக & கலாச்சார நலத்திட்டங்கள் என்று,
உலகம் முழுவதும் பக்தியாலும், நம்பிக்கையாலும், அற்புதங்களாலும் போற்றப்படும் ஸ்ரீ சத்திய சாய் பாபா, பிரபஞ்ச சக்திகளும் பேரருளும் கொண்ட தெய்வ அவதாரமே. அவர் விதைத்த அன்பும் சேவையும் இன்று உலகம் முழுவதும் பிரகாசமாகத் ஜொலித்து வருவது உண்மையே!
ஜெய் சாய்ராம்.
குருஜி Dr. பத்ரி நாராயணன்

2 Comments

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!