செய்திகள்தமிழகம்

அதிரடி உத்தரவு! நாகை மாவட்டத்தில் கடற்கரைக்கு செல்லத் தடை!!

62views

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல அம்மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது கொரோனா 3ஆவது அலை எச்சரிக்கையா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள்அமலுக்கு வர உள்ளன.

கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக சென்னையிலுள்ள உணவகங்கள் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாவட்டங்களிலும் கோவில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நாகை மாவட்டத்தில் இன்று முதல் வரும் வரும் 9 ஆம் தேதி வரை கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .

ஆடி அமாவாசையை முன்னிட்டு நாகை , வேதாரண்யம் , கோடியக்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் திதி கொடுக்க பொதுமக்கள் ஒன்று கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது .

நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயம் , எட்டுக்குடி முருகன் ஆலயம் , நாகை சவுரி ராஜன் பெருமாள் ஆலயம் , உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு தரிசனத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!