செய்திகள்தமிழகம்

முதலைமைச்சர் தலைமையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின்றன

127views

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன.

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், 82 ஆயிரத்து 400 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் வகையில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.

ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, லாஜிஸ்டிகஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, Capital land, Adhani, JSW உள்ளிட்ட நிறுவனங்களும் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். அதுமட்டுமின்றி, 14 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!