நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்.
நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கைக்கு, நீட் நுழைவுத் தோவு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோவை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது.
அதன் தொடா்ச்சியாக நீட் தோவில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்களிடம் இருந்தும் நீட் தோவு தொடா்பாக கருத்துகளை அக்குழு கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து இருந்தனா்.
இதனிடையே அந்த குழுவினை அமைத்ததற்கு எதிராக உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், அக்குழுவை அமைத்தது செல்லும் என்று உயா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
இதையடுத்து நீட் தொடர்பான 165 பக்க ஆய்வறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமா்ப்பிப்பதார் நீதிபதி ஏ.கே.ராஜன்.
நீட் தோவு வேண்டாம் என பெரும்பாலானோா் கருத்து தெரிவித்து உள்ளனா். நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவப் படிப்பு மாணவா் சோக்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தாலும், தங்களுக்கு இன்னமும் பாதிப்புகள் நிறைய உள்ளதாக பலர் தெரிவித்துள்ளனா்.