செய்திகள்தமிழகம்

ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் செயல்களை பாஜக வேடிக்கை பார்க்காது: மாநில செயற்குழுவில் தீர்மானம்

87views

இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடுவிளைவிக்கும் எந்த செயலையும் பாஜக வேடிக்கை பார்க்காது என்றுபாஜக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாஜக மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் சென்னை கமலாலயத்தில் நேற்றுநடந்தது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள குழு உறுப்பினர்கள் ஆங்காங்கே இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு திமுகவினர், மத்திய அரசு என்பதற்கு பதிலாக’ஒன்றிய அரசு’ எனும் சொல்லைபயன்படுத்துகின்றனர். பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”மாநிலங்களால் ஆனது இந்தியா. அரசியலமைப்பு சட்டத்தில் ‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’ என்றே இந்தியா வரையறுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருப்பது வியப்பை அளிக்கிறது.

‘இந்தியா பல மாநிலங்களைக் கொண்டதாக இருக்கலாம்’ என்றே அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்தியா தனது நிர்வாகவசதிக்காக தன்னை மாநிலங்களாக பிரித்து அரசாளும் என்பதே இதன் பொருள். எனவே, ‘இந்தியாவால் அமைந்ததே மாநிலங்கள். இதில் நிலைத்து நிற்பது இந்தியாதான். மற்ற அனைத்துமே மாறக்கூடியவை’ என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்.

‘ஒன்றியம்’ என்ற சொல்லாடலை பயன்படுத்துவதன் மூலம் மத்திய அரசை சிறுமைப்படுத்துவதாக எண்ணி புளகாங்கிதம் அடைந்துகொண்டு, ஏதேதோ விளக்கம் கூறிக்கொண்டு இருப்பதை, கரோனாவை சமாளிக்க முடியாமல் திணறுவதை மறைக்கும் முயற்சியாகவே மக்கள் பார்க்கிறார்கள்.

ஒன்றியம் என்ற சொல்லில் குற்றம் இல்லை என்றாலும், இதைசொல்வதில் பெரும் உள்நோக்கம் இருப்பதாகவே பாஜக கருதுகிறது.

முதல்வர் ஸ்டாலின் வெற்றிபெற்ற மறுநிமிடமே, ‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்’ என்றுபதிவிட்டார். 1962-ல் நாடாளுமன்றத்தில் அண்ணா, ‘நான் திராவிட இனத்தை சார்ந்தவன்’ என்று சுயநிர்ணயம் குறித்து பேசினார். அதற்கு பதிலளித்த வாஜ்பாய், ‘சுயநிர்ணயம் என்ற பெயரில் இந்தியஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்து இந்தியாவை துண்டாட துடிக்கும் சக்திகளை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற தேசவிரோத குரல்களை ஒடுக்ககடும் சட்டங்களை கொண்டுவர வேண்டும்” என்று முழங்கியதை இந்த செயற்குழு நினைவுகூர்கிறது. இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கும் எந்தசெயலையும் பாஜக அனுமதிக்காது, வேடிக்கை பார்க்காது.

நீட் தேர்வை நீக்குவதற்கு இனி வாய்ப்பே இல்லை. திராவிடக் கட்சிகள் அதை வைத்து சுயநல அரசியல் செய்கின்றன. தமிழக மாணவர்கள் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் சொத்துகளை முறையாக நிர்வகிக்க வேண்டும், தரிசனடிக்கெட் முறையை ஒழிக்க வேண்டும், அறநிலையத் துறைக்கென தனி ஊழல் கண்காணிப்பு பிரிவுஅமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!