செய்திகள்தமிழகம்

14 கி.மீ கிரிவலப்பாதையில் அங்கப் பிரதட்சணம்!

109views

உலகம் முழுவதும் கொரோனா ஒழிய வேண்டுமென ஆந்திராவை சேர்ந்த அருணாச்சல மாதவிஎன்ற பெண் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தார்.

45 வயதாகும் மாதவி தீவிர சிவ பக்தர். ஆந்திராவில் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அண்ணாமலையார் மீது கொண்ட ஈர்ப்பால் 15 வருடத்திற்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்து தங்கி விட்டார். தனது பெயருக்கு முன்னால் அருணாச்சலம் என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம் . கொரோனா தோற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் கடந்த ஆண்டு முதல் கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது . இந்நிலையில் தான் அருணாச்சல தேவி அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார் .

அன்னதானம் ¸ வஸ்திரதானம் வழங்கி ஆன்மீக சேவையாற்றி வரும் அருணாச்சல மாதவி ஏழை மாணவ – மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறார் . மேலும் 63 நாயன்மார்கள் குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதி வருகிறார் .

உலக நன்மைக்காக ஏற்கனவே திருவண்ணாமலையில் 3 முறை அங்கப்பிரதட்சணம் செய்துள்ள இவர் தற்போது கொரோனா ஒழிய வேண்டும் என 4 ஆவது முறையாக அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார் . சுட்டெரிக்கும் வெயிலில் அவர் 14 கிலோ மீட்டர் தூரம் அங்கப்பிரதட்சணம் செய்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!