வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது. குறிப்பாக நேற்று முதல் 12ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.
இந்நிலையில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து ஒடிசா அருகே கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி தாக்கத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை; ஆனால் வெப்ப சலனம் மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய இந்த காற்றழுத்தம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.