செய்திகள்தமிழகம்

இன்றுமுதல் 279 மின்சார ரயில்கள் இயக்கம்: அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி

63views

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா பரவலைதடுக்கும் வகையில், மாநில அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், ரயில்வே, சுகாதாரம், நீதிமன்றம், தூய்மைப் பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசு நிறுவன ஊழியர்கள், துறைமுகம், வங்கிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே மின்சார ரயில்களில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு, இன்றுமுதல் 279 மின்சார ரயில்களாக இயக்கப்படும். சென்னை – திருவள்ளூர், அரக்கோணம் – 48, திருவள்ளூர், அரக்கோணம் – சென்னை – 49, சென்னை – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை – 24, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை – சென்னை – 24, சென்னை கடற்கரை – வேளச்சேரி – 12, வேளச்சேரி – சென்னை கடற்கரை – 17, சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் – 44, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் – 44, ஆவடி – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ -2, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ – ஆவடி, பட்டாபிராம் – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ -4, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டெப்போ – 4 என மொத்தம் 279 மின்சார ரயில்கள் இயக்கப்படும்.

அதேநேரத்தில் ஞாயிறு காலஅட்டவணையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!