செய்திகள்தமிழகம்

கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின்

109views

கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மறைந்த திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு,காலை, 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து, பல்வேறு திட்டப் பணிகளை,முதல்வர் ஸ்டாலின், இன்று(ஜூன் 3) துவக்கி வைக்கிறார்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில்,காலை, 10:30 மணியளவில் ரேஷன் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு,கொரோனா நிவாரணத் தொகையின், இரண்டாவது தவணை,ரூ.2,000 வழங்கும் திட்டம், 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்,இந்து சமய அறநிலையத் துறை சார்பில்,கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி,13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்,

கொரோனாவால் இறந்த, பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய்; மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவலர், நீதிபதிகள் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் திட்டம்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட பயனாளிகள், 10 பேருக்கு, அரசு பயன்கள் வழங்கும் திட்டம் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!