பத்மா ஷேசாத்ரி பள்ளியை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெர்வித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளியை தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் எனக் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.