செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு: அரசு அறிவிப்பு

69views

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த தொற்று காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு மாநிலங்கள், ஊரடங்கை அறிவித்துள்ளன. தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ள தமிழக ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இருந்தும் கொரோனா தினசரி பாதிப்பு 36 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தும் தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நடத்த பல்வேறு துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்று பரவல் காரணமாக மருத்துவ துறையே பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்தார். ஊரடங்கு காலத்தை சிலர் விடுமுறை காலத்தை போல நினைத்து ஊர் சுற்றி வருவதாகவும், இதனால், தொற்று பரவல் அதிகரித்து வருவகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் நாட்டிகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்ப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!