தமிழகம்

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி..!!

66views

வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதை தடுத்து நிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுமட்டுமின்றி, 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி அளித்து தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில், ஓராண்டு பணி புரிந்த பின்பே மருத்துவ பணி என்ற விதி இருந்தது. வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சியின்போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி ஆகும் ஏற்கனவே இருந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள் தேவை கருதி தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!