தமிழகம்

சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை!!

60views

சென்னை வியாசா்பாடியை சேர்ந்த ‘வியாசை தோழா்கள்’ எனும் அமைப்பைச் சோந்த சட்டக் கல்லூரி மாணவா்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் ஆட்டோ சேவை செய்து வருகின்றனா்.
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. தினமும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். அதே போல் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்வடசென்னை பகுதியில் ‘வியாசை தோழா்கள்’ என்ற அமைப்பின் மூலம் சட்டக் கல்லூரி மாணவா்கள் ஒருங்கிணைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனா் .
குறிப்பாக ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவா்களுக்காக , ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்திய ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை இலவசமாக செய்து வருகின்றனா் . 30 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் உள்ள இந்தக் குழுவில் உள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!