சிறுகதை

நெ .36 ரங்கநாதன் தெரு, தியாகராய நகர், சென்னை.

759views

னக்கு அப்போது 6 வயது இருக்கும் பல்லாவரத்தில் இருந்து ரங்கநாதன் தெருவிற்கு குடிபெயர்ந்தோம். 1974ல் ரங்கநாதன் தெருவில் கடைகளை என்னிவிடலாம்.

நாங்கள் இருந்த கட்டிடத்தின் பெயர் Annammal Building.
முகப்பில் கடைகளும் சிறிய வாசல் வழியாக உள்ளே சென்றால் இத்தனை பெரிய இடமா என்று வியந்து போகும் அளவிற்கு
உள்ளே  பெரிதும் சிறிதுமாக  ஏறக்குறைய 20 வீடுகள். நாங்கள் குடியிருந்த ஓட்டு வீடு  வெறும் 250 Sq feet தான்.  ஒரு ரூம் பின் அதில் ஒரு தடுப்புச் சுவர் தான் சமையலறை.

Bathroom மற்றும் toilet compoundக்குள் கடைசியில் ஒதுக்குப் புறமாக  இருந்ததால் கட்டிடத்தின்  உள்ளே  2நிமிட நடை.. கல் மற்றும் மண் தரையில்.

நாங்கள் இருந்தது ஓட்டு வீடு என்பதால் வீட்டுக்குள் எலி வந்துவிடும். துணிகளையும்  புத்தகங்களையும் கடித்து விடும் நானும் எனது அப்பாவும் அதை வேட்டையாடுவோம்.  எனது தந்தை எலியை விட வேகமாக ஓடி பாத்திரங்கள் உருண்டாலும் எலியை சரியாக
அடித்து விட்டு தான் stickஐ கீழே வைப்பார்.  மாதத்திற்கு ஒரு எலி கண்டிப்பாக வந்துவிடும். எலியை துரத்தி கொண்டு ஓடுவது எங்களுக்கு நல்ல உடற்பயிற்சி ஆக இருந்தது.

இரவில் மழை பெய்ய ஆரம்பித்தால் வீட்டிற்குள் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும். நடுநிசியில் தூக்கத்தில் இருந்து எழுந்து பாய் மற்றும் தலையணையை  மடித்து வைத்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தவாறே தூங்குவோம்.

1976ம் வருடம் தொலைக்காட்சி வந்த புதிது எங்கள் compoundல் யாருக்கும்  வாங்க வசதி இல்லை.  எங்கள் கட்டிடத்திற்கு அடுத்ததாக இருந்த மருத்துவர் வீட்டில் வாங்கி இருந்தார்கள்.
அவர் பெயர் Dr.மகாலிங்கம். வயது 60ஐ கடந்திருக்கும். வீட்டிலேயே கிளினிக்கும் வைத்திருந்தார்.

சிறுவர்கள் நாங்கள் ஞாயிறு அன்று படம் பார்க்க வேண்டும் என்றால் காலை 8 மணிக்கு அவர் வீட்டுக்கு சென்று வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்க  வேண்டும்.  மருத்துவர் எங்களுக்கு எல்லோருக்கும் தனித்தனியாக அவர் கையால் சீட்டு எழுதி பச்சை inkல் கையெழுத்து போட்டு கொடுப்பார் (நோயாளிகளுக்கு   சீட்டில் மருந்தின் பெயர்களையும், படம் பார்க்க வரும் எங்களுக்கு படத்தின் பெயரை சீட்டில் எழுதி  கொடுப்பார்.  மருந்து சீட்டில் ஏதாவது ஒரு பெயரை  எழுதுவது அவர் ரத்தத்தில் ஊறி விட்டது போலும்) காலை 9 மணிக்கு மேல் சென்றால் housefull board மாட்டிவிடுவார். மாலை படம் ஆரம்பிக்கும் முன் சீட்டை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்கு செல்வோம் அதை அவர் மனைவி சரிபார்த்து  எங்களை உள்ளே செல்ல அனுமதிப்பார்.  பெரிய விடு  கூட்டம் அதிகமாக இருக்கும். எங்களுக்கு எப்போதும் முதல்  வரிசை தான்.
கிளினிக்கில் கூட அத்தனை கூட்டம் வராது  ஆனால் அவர் வீட்டிற்கு படம் பார்க்க சரியான கூட்டம் சேரும்.

எங்கள் நேர் எதிர் வீட்டில் வயதான தம்பதியினர் குடியிருந்தனர்.  வாரத்திற்கு 3 நாட்கள் ஏதாவது ஒரு பண்டிகை பெயரைக் கூறி
சுடச்சுட நெய்யும்
முந்திரியுமாக சர்க்கரை பொங்கல், வடை,கேசரி என்று நைவேத்யம் செய்ததை முதலில் எனக்கு கொண்டு வந்து கொடுப்பார்கள்.
மிகவும் சுவையாக இருக்கும்(அதைப் போல ஒரு எதிர் வீடு இன்றுவரை அமையவில்லை)

அந்த compoundல் இரண்டு மிகப் பெரிய மாமரங்கள் இருந்தது. ஏப்ரல்/ மே மாதத்தில் காய்ந்து குலுங்கும். மாங்காய் மிகவும் சுவையாக இருக்கும். மாங்காய் பறிக்க வேண்டும் என்றால் இரண்டு பெரிய சுவரை தாண்டி மேலே ஏற வேண்டும். அந்த வயதில் பயம் தெரியாது என்பதால் நண்பர்களுடன் நானும் சுவர்களை தாவி ஏறிவிடுவேன். ஒரு முறை மரத்தின் மேலே ஏறி மாங்காய் பறிப்பதை என் அப்பா பார்த்துவிட்டார். கீழே இறங்கி வந்தவுடன் சரியான அடி கிடைத்தது. அன்று முதல் என் அப்பா மரத்தில் மாங்காய் இருக்கிறதுதோ இல்லையோ நான் மரத்தில் மேல் இருக்கிறேனா என்று பார்த்து கொண்டேதான் வீட்டிற்கு வருவார்.

நானும் எனது நண்பர்களும் mambalam madley road level crossingல் மணிக்கணக்கில் நின்று கொண்டு எப்படி signal கிடைத்து railway gateஐ திறந்து மற்றும் மூடுகிறார்கள்  என்று பார்ப்போம். அந்த வயதில் அதெல்லாம் எங்களுக்கு பிரம்மிப்பாக இருந்தது.
vaigai express ரயில் முதல் முறையாக August 15, 1977 அன்று தொடக்கிவைக்கப்பட்டது.  (egmore to madurai முதல் அதி வேக ரயில்)
கட்டிடத்தின் வாயிலில் நின்று பார்த்தால் ரயில் போவது தெரியும் என்பதால் வெளியே வந்து நின்று பார்த்தோம். Meter Guage trackல் ஏறக்குறைய 60 வேகத்தில்  ரயில் வேகமாக சென்ற போது எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது.

அந்த compound watchman பெயர் Murugesan. எனக்கும் என் தங்கைக்கும் அவர் பெயரைக் கேட்டால் சிம்மசொப்பணம். எனது அம்மா அவர் பெயரைச் சொல்லிதான் எங்களை பயமுறுத்துவார்.
பள்ளிக்கு நாங்கள் கிளம்ப அழுதால் Murugesan வேப்பமர கிளையை உடைத்து எங்களை அடிக்க வருவது போல் பாவ்லா செய்தால் உடனே uniform போட்டுக்கொண்டு பள்ளிக்கு கிளம்பி விடுவோம்.

8 வருடங்கள் அந்த வீட்டில் குடியிருந்தோம். 1982ம் வருடம் மேற்கு  mambalamத்தில் சொந்த வீடு கட்டி குடியெறினோம்.
பின்னர் எப்போதாவது t.nagar செல்லும் வழியில் Murugesanப் பார்ப்போம். பின்னர் பல வருடங்கள் கழித்து renganathan தெரு வீட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.  வீடுகள் எல்லாம் பேச்சுலர் விடுதிகள் / மற்றும் கடைகளாக மாறிவிட்டது. என் மனதை விட்டு நீங்கா இடம்பெற்ற  மாமரங்கள் காணாமல் போயிருந்தது. அந்த இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டியிருந்தார்கள். மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

வேலை நிமித்தமாக Gulf வந்தவுடன் 10/15நாட்கள்  விடுமுறையில்  இந்தியா வருவதால்
என்னால் அங்கே செல்ல சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

எனவே இந்த முறை விடுமுறையில் (2017) கண்டிப்பாக அந்த வீட்டை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, ranganathan Street ல் purchaseஐ முடித்துவிட்டு Annammal building  வீட்டுக்கு சென்றோம்.

கடைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருந்தது 1st floorல்லும் கூடுதல்  பேச்சுலர் விடுதிகள் மற்றும் கடைகளை காட்டியிருந்தார்கள். Murugesanஐ பார்ப்பதற்காக ஆபீஸ் ரூமுக்கு  சென்றேன். அங்கே அவரை காணவில்லை எங்கே என்று கேட்டதற்கு அவர் mobile no கொடுத்து பேசச்சொன்னார்கள். உடனே dial செய்தேன். அவர் தான் phoneஐ எடுத்தார் நான் சாந்தா மாமி மகன் நாராயணன் என்றேன் உடனே அவர் Usha எப்படி இருக்கிறார் என்று கேட்டார்..பல வருடங்கள் ஆகியும் எங்களை ஞாபகம் வைத்துக் கொண்டு இருக்கிறாரே என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எங்கே இருக்கீங்க என்று கேட்டதற்கு அவர் மகன் Engineerஆக USA வில் வேலை பார்த்து தனக்கு சொந்தமாக சைதாப்பேட்டையில் வீடு வாங்கி
கொடுத்து
விட்டதாகவும்,  வேலையையும் விட்டு விட்டதாக கூறினார்.
என்னைப் பற்றி கேட்டு விட்டு
பின்னர் அவர் நாராயணனா உன் மகனும் Usha மகளும் அழாமல் பள்ளிக்கு செல்கிறார்களா என்று அவர் கேட்டபோது என்னால் சிரிப்பை அடக்க
முடியவியவில்லை.

  • நாராயணன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!