விளையாட்டு

3 ஒருநாள் போட்டி, 5 டி 20ல் பங்கேற்பு- இலங்கை சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டன்?

66views

ரும் ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ள இந்திய அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாக நியமிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடும் வகையில் அட்டவணையை தயாரித்து பிசிசிஐயின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒருநாள் போட்டி ஜூலை 13, 16, 19-ம் தேதிகளிலும் அதைத் தொடர்ந்து டி 20 தொடர் ஜூலை 22 முதல் 27-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் வகையில் இந்திய அணி ஜூலை 5ம் தேதி இலங்கைக்கு சென்று போட்டிகளை முடித்துக்கொண்டு ஜூலை 28ம் தேதி தாயகம் திரும்பும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை சென்றடைந்ததும் இந்திய அணி ஒருவாரகாலம் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். இந்த ஒருவார காலம் இரு பகுதிகளாக பிரிக்கப்படும்.

முதல் பகுதி 3 நாட்களை கொண்டதாக வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டல் அறையிலேயே தங்களைய தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன் பின்னர் அடுத்த 4 நாட்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இந்த காலக்கட்டத்தில் வீரர்கள் ஓட்டல் மற்றும் மைதானத்தை தவிர வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த இலங்கை சுற்றப்பயணத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் யாரும் இடபெறமாட்டர்கள் என தெரிகிறது.

ஏனெனில் ஜூன் 18ம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக விராட் கோலி தலைமையில் அறிவிக்கப்பட்டள்ள 20 பேர் கொண்ட இநதிய அணி வரும் 25-ம் தேதி முதல் உயிர் பாதுகாப்பு குமிழிக்குள் 8 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க உள்ளனர். இதன் பின்னர் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்லும் இந்திய அணியினர் ஜூன் 2-ம் தேதி முதல் அங்கு 10நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருப்பார்கள். அதைத் தொடர்ந்தே நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறும் இறுதிப் போட்டியில் பங்கேற்க சவுத்தாம்டன் நகருக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை நோக்கி நகரத் தொடங்கி உள்ளதால் இலங்கை சுற்றப்பயணத்துக்கு ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்தி ய அணியே தேர்வு செய்யப்படக்கூடும் என தெரிகிறது. ஷிகர் தவண் தலைமையிலான அணியில் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், சூர்யகுமார் யாதவ், ராகுல் ஷகர், தீபக் ஷகர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் சேதத்தன் சகாரியா உள்ளிட்டோத் இடம் பெறக்கூடும்.

35 வயதான ஷிகர் தவண், ரஞ்சி கோப்பை தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிடாஷ் கோப்பை தொடரில் ஷிகர் தவண் துணை கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 34 டெஸ்ட், 142 ஒருநாள் போட்டி, 65 டி 20 ஆட்டங்களில் விளையாடி உள்ளதால் அவரது அனுபவம் அணியை திறம்ப வழிநடத்த உதவுக்கும் என கருதப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!