கல்வி

cbse.gov.in தளத்தில் மாணவர்களுக்கான முக்கிய குறிப்புகள் வெளியீடு

138views

COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலைபரவலை தொடர்ந்து, சிபிஎஸ்சி 10 வகுப்பு தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. 12ம்வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் மனரீதியாக நிறைய சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனை கருத்தி கொண்டு மத்திய இடைநிலைக் கல்விவாரியம் (CBSE) சமீபத்தில் தனதுமாணவர்களுக்கு மிகவும் தேவையான மனநலம் மற்றும்ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகளை, அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in என்றதளத்தில் வெளியிட்டுள்ளது.

COVID-19 தொற்றுநோய் காரணமாக, உலகெங்கிலும் உள்ளமாணவர்கள், குடும்பங்கள் மற்றும் ஆசிரியர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். அதிலிருந்து வெளிவருவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

  • அரசாங்க வலைத்தளங்கள், இணையதளங்கள் மற்றும் செய்திவெளியீடுகள் போன்ற நம்பகமான, அதிகாரபூர்வமான தளங்களில்  வெளியிடப்படும் தகவல்களை அறிந்துகொண்டு, COVID-19 தொற்றுநோய்பற்றிய உண்மையான செய்திகளை பெறுங்கள்.
  • செய்திகளை மிக அதிகம் பார்ப்பதை தவிர்க்கவும்
  • பயம், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலை ஆகியவற்றை நிதானத்துடன் கையாள வேண்டும்.
  • இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான நபர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
  • மக்களின்பாதுகாப்புமற்றும் ஆரோக்கியத்திற்காக அயராது, தன்னலமின்றி உழைக்கும் நாட்டின் பலதுறைகள் மற்றும் அமைப்புகள் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்.
  • தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க, WHO இந்தநோயால் பாதிக்கப்பட்டவர்களை ‘கோவிட் -19 வழக்குகள்’ என்று குறிப்பிடக்கூடாது என்று கூறியுள்ளது.
  • சமூகரீதியில் ஆதரவை வழங்கவேண்டும்
  • தன்னையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.
  • நேர்மறை விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்
  • பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவும்

இந்த ஆலோசனைகளைபின்பற்றினால், நிச்சயமாக COVID-19 தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து நிச்சயம் மீளலாம்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!