தமிழகம்

“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்

245views

‘மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு ஆலய வளாகத்திற்குள் வாகனகாட்சியாக நடைபெறும்’ என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகப் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக இந்தாண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தில் திருவிழாவாக கொண்டாடாமால், வாகன காட்சியாக திருக்கோயில் வளாகத்திற்குள் நடைபெறவுள்ளது. அதேபோல, திருவிழா நடைபெறும் 23 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் விழாக்களில் சாமி புறப்பாடு, வாகனங்களில் எழுந்தருளுதல், கெருடசேவை, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல், உள்ளிட்ட வைபவங்கள் ஏற்பாடுகளில் பக்தர்களுக்கு அனுமதியில்லை.

ஆலய வளாகத்திற்குள்ளே கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளுதல், ஆண்டாள் மாலை சாற்றுதல் உள்ளிட்ட அனைத்து விதமான திருவிழா ஏற்பாடுகளும் நடைபெறும். பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில், அதிகாரபூர்வ கோயில் யூடியூப் பக்கம், இந்து சமய அறநிலையத்துறை இணையதளம் மற்றும் ஆலய வளாகத்தின் வெளியே அகன்ற திரையில் விழா நிகழ்வுகளை ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் கோயிலில் திருவிழாவின்போது பெறப்படும் மரியாதைகள் உள்ளிட்டவை எதற்கும் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!