சிறுகதை

மனம் என்னும் மாயவலை

561views

சூரியன்   வரலாமா வேண்டாமா  என  வெட்கப்பட்டு  மெல்ல  அடியெடுக்கும்  காலைப்பொழுது  ,

பக்கத்து  வீட்டு  குக்கர் சுப்ரபாதம்  பாட , திடுக்கென  விழித்தாள் சுவேதா ,

ஏன்  இந்த  திடுக்கென்றால்  ஒன்னும் தலைபோற விசயம் இல்லை

நாம இரவு  படுக்கும்  போது  காலையில்  இத்தனை  மணிக்கு  விழிக்க  வேண்டும்  என்று  மனதில்  நினைத்திருப்போம்  ஆனால்  ,

சோதனையாக  என்றாவது  ஒரு  நாள்  நாம்  நினைத்த  நேரப்படி எழவில்லையென்றால்   மனசு  லேட்டாயிடுச்சேன்னு   திடுக்கென   விழிக்கும்   அப்ப   ஆரம்பிக்கும் பாருங்க  நமக்கு  சொதப்பல்   அன்னிக்கு  முழுதும்  அப்படித்தான்  டென்ஷனா  இருப்போம் ,

அப்படித்தான்  சுவேதாவும்  திடுக்கென   விழித்தாள் .

அவசர அவசரமாக  படுக்கையில்  இருந்து  எழுந்து  ,  தலையணை பக்கத்தில் வைத்திருந்த

செல்லில்   முதலில்  முருகர்  முகத்தில  விழிச்சிட்டு  அப்பறம் அந்த  செல்லைப்  பார்த்தே  முடியை  சரி பண்ணிக்கிட்டு  , வேகமாக  கேட்டைத்திறந்து   வாசல்  தெளித்து  ,

அவசரத்துக்கு   கை   கொடுக்கும்   4  ம்  வகுப்பு  கோலத்தை  (  அந்த  வயதில்  கத்துக்கிட்ட  ஸ்டார்  கோலம்  )  போட்டுவிட்டு உள்ளே  வந்தாள் ,

பல்துலக்குதல் உள்ளிட்ட காலைக்கடன்களை முடித்து குளித்து , காபி போட்டு   அனைவரையும் எழுப்பும்  போது  மணி ஏழு .

இதுக்கு மேல  டிபன் , செய்து , சமையல் செயது , 8:30 மணிக்கு ஸ்கூல்  வேனில் பையனை ஏற்றிவிடனும்,

முருகா  இன்னும்  இரண்டு  மணி நேரத்துக்கு   உன்  12 கைகளில்  இரண்டு கைகளை  கடனா கொடேன் ,

நான்  எல்லா  வேலையும்  முடிச்சிட்டு திருப்பி  தந்து விடுகிறேன்  என்று  முருகனிடம்  டீலிங்  பேசிககொண்டிருந்தாள்  மனதிற்குள் .

குளித்து முடித்துவிட்டு வந்த  பிரவீன் ,  சுவேதா பனியன்  எங்கே ..?  ஜட்டி  எங்கே ..?  சட்டை எங்கே  என   சுவேதாவை  ஏலம் போட்டுக்கொண்டிருந்தான்   பிரவீன் .

10 நிமிடம்  பொறுமையாக  பிரவீன் சொன்ன  வேலைகளையெல்லாம்  செய்துகொண்டிருந்த  சுவேதா  ஒரு  கட்டத்தில்

பொறுமையிழந்து  , உங்க வேலையை நீங்க செய்துக்க முடியாதா  , சும்மா ,சும்மா என்னை ஏன்  தொந்தரவு பண்றீங்கன்னு  சலிச்சிகிட்டா    சுவேதா ,

ஆமா  , இப்ப  அண்டை வெட்டி , மடை மாறின   பாரு   இப்படி  சலிச்சிகற  என்றான் பிரவீன் .

அப்படியா  ,.. அப்ப  நீங்களே   செய்துக்க  வேண்டியது  தானே என பதில்  பேசினாள்  சுவேதா ,

வரவர    உனக்கு  கொழுப்பு  ஜாஸ்தி  ஆயிடுச்சி  சுவே என்றான்  பிரவீன்  .

ஆமாம் , ஆமாம்   நீங்க  நெய்யும்  பாதாமும்  வாங்கி போட்டிருக்கீங்க  பாருங்க  சாப்பிடறதுக்கு  ,

அதை சாப்டு , சாப்டு  எனக்கு  கொழுப்பு  ஏறதுக்கு  என நக்கலடித்தாள்  சுவே ,

எப்பவுமே  கணவன், மனைவி , உரையாடல்  தென்றலாகத்தான்  ஆரம்பிக்கும்   அது  எப்ப புயலாக  மாறும்னு  ரெண்டு  பேருக்குமே  தெரியாது .

இப்ப   பிரவீனுக்கும்  , சுவேதாவுக்கும்  , இடையே  தென்றலாக  இருந்தது  கொஞ்சம் ,கொஞ்சமாக  புயலாக  மாறும்  அபாயத்தை  நெருங்கிக்   கொண்டிருந்தது .

நான்    பாதாமும்  நெய்யும்  வாங்கிபோட்டு  , அதை நீ  சாப்டாம  தான்  , கல்யாணத்தப்போ  50 கிலோ இருந்த  நீ  இப்ப  80 கிலோவா  மாறியிருக்கியா  ,  உங்க  அப்பன் வீட்ல   மூணு  வேளை  சாப்பாட்டுக்கே  வழிஇல்லாம  கிடந்த  நீ  இப்ப  உனக்கு   பாதாமும்  நெய்யும் கேட்குதா , எனக்  குத்தலாக  பேசினான் பிரவீன் .

நம்மள   என்னதான்   கேவலமா  பேசினாலும்  பொறுத்துக்கொள்ளும்  ஆணும் , பெண்ணும்  அவங்க , அவங்க  பிறந்த  வீட்டாரை  குறைசொன்னா  மட்டும்  பொத்துகிட்டு  வரும்  கோபம்  என்ன  தான் டிசைனோ  தெரியலை  .

சுவேதா  மட்டும்  விதிவிலக்கா  என்ன ,

பச்ச  மிளகாய்  கடிச்சா  மாதிரி  கோபம் சுள்ளென்று   ஏறியது சுவேதாவிற்கு  .

ஆமாம்    நாங்க  சாப்பாட்டுக்கு  வழிஇல்லாத   பரம்பரை  நீங்க   மைசூர்  ராஜ  பரம்பரையாச்சே  இங்க  வந்து  ஏன் பெண் எடுத்தீங்க   என்று  அவ்வளவு   கோபத்தையும்  , கிண்டலாக    மாற்றினாள்  சுவேதா  .

அதான்  விதி   உங்கப்பன்  ரயில்  ஓடுது  , பிளைட்  ஓடுதுன்னு   கதை விட்டான்  நாங்களும்  நம்பிட்டோம்  என்றான் பிரவீன் .

அதற்கு  சுவேதா  பதில் சொல்ல   இப்படியே   இருவரும்   பரம்பரையை  தோண்டி  தூர்வாரிக்கிட்டு  இருந்தாங்க  ,  செத்தவங்களை   எல்லாம்   வார்த்தைகளால்  போஸ்ட் மாடம்   பண்ணிகிட்டு  இருந்தாங்க   .

புயல்   காற்று  பலமாக வீசியது  .கொஞ்ச நேரத்தில்  இடியென  அடி  சுவேதாவின்  கன்னத்தில்   இறங்கியது  .

இவ்வளவு  நேரம் என்ன நடக்குதுன்னு  தெரியாம  வேடிக்கைப்  பார்த்த  மகன்  அம்மாவை  அடித்ததும்  ஓடிவந்து  அம்மாவை  கட்டிப்  பிடித்துக  கொண்டான் .

கோபத்துல    அடிச்சிட்டானே  தவிர  , பிரவீன்   கெல்டியா  பீல்  பண்ணான் ,

அங்கு  மயான  அமைதி  நிலவியது  .ரோபோ  போல  அவரவர்  வேலைகளை  அவரவர் செய்தனர்  .

வேலைகளுக்கு  நடுவே  சுவேதா   “அழுது  கொண்டே இருந்தாள்  , நடுத்தர  வர்க்கத்து  பெணகளின்   அதிகபட்ச  கோபமே கண்ணீர் தானே ,

மகனுக்கு  மதியம் லஞ்ச் இட்லி  மட்டுமே  கொடுத்தாள்  சுவேதா .

பிரவீனுக்கு   அதுகூட  இல்லை லஞ்ச்  கட்டவே  இல்லை  ,  நிவைமையை  புரிந்து  கொண்ட   பிரவீன் ,  காலைல  மட்டும்  இட்லி  சாப்பிட்டு விட்டு   லஞ்ச்  கேட்காமலே  கிளம்பினான்  .

அலுவலகத்தில்  பிரவீனுக்கு  வேலையே ஓடலை  காலைல சண்டையே  , கிரிக்கெட்  மேட்ஜ்ல   ரீவைண்டு  ஆகறா மாதிரி  மனசுகுள்ள  ஓடிகிட்டே இருந்தது .

சுவேதாவுக்கு  போன் பண்ணி  சாப்டியான்னு  கேட்டான் பிரவீன் ,   ”  ம்  ”  என்ற   ஒற்றை  சொல்  தான்  பதிலாக  வந்தது  .

மதியம்  லஞ்ச்  அப்ப  சுவேதா  கால்  பண்ணி  சாப்டீங்களான்னு  கேட்டா  தான்  இயல்பா  இருக்கறதை   காட்டறதுக்காக   , என்ன தான்  இருந்தாலும்  நடிப்பு  வெளிப்படத்தானே  செய்யும் .

சுவேதாவை  எப்படி  சமாதானப்படுத்தலாம்  என்றே  யோசித்துக்  கொண்டிருந்ததால்   வேலை  சரியா  நடக்கல  அதிகாரிக்கிட்ட   திட்டு வாங்கிக்  கொண்டிருந்தான்  ,

அப்பதான்   பிரவீன்  நினைச்சான் . இவரு திட்டறதை  எல்லாம்  பொறுத்துகறோம்  பாவம்  சுவே  நமக்காக உழைக்கறா  அவ ஜாலியா  பேசனதை  ரசிக்காம  நாம  தான்  வார்த்தையை  விட்டோமோ என வருந்தினான்  .

வாய்ச்சண்டைக்கே  புயல்  நாலைந்து  நாட்கள்  மையம்  கொண்டிருக்கும்  . இப்ப  அடிச்சாச்சு   ஒரு  வாரத்துககு  ம்   என்று  சொல்லியே  கொல்லப் போறா  என  நினைத்துக்  கொண்டான் .

எப்படி  சமாதானப் படுத்துவது  என  யோசித்தவன்  , ஒரு  ஐடியா  வந்தவனாய்   ,  குழப்பம்  இல்லாம  வேலையை செய்தான் .

மாலை  வீட்டிற்கு  வந்த  பிரவீன்  கையில்  ஒரு  பார்சல்  இருந்தது  , அதைக்  கண்டுகொள்ளாமல்  சுவேதா   பிரவீனுக்கு  காபி  கொடுத்தாள்  .

பிரவீன்  முகம்  கழுவி  களைப்பு  நீங்கி  ,சுவேதா  கிட்ட  அந்த  பார்சலைக்  கொடுத்தான்  .

சுவே  உனக்கு  பிடிச்ச  கிரேப் சில்க்  புடவை என பார்சலை  சுவேதாவிடம் நீட்டினான்.

இன்னிக்கு  என்ன விசேசம் , பிறந்த  நாள் , கல்யாண  நாள்  எதுவும் இல்லையே  என்றாள் சுவே .

சும்மா  தான்  சுவே   , காலையில் இருந்து  மனசு  ஒரு  மாதிரிஇருக்கு  , நைட்  டின்னருக்கு  ஹோட்டலுக்குப்  போலாம்  என  அழைத்தான்  பிரவீன் .

லேசாக  சிரிச்ச   சுவேதா  , ஓ ..இப்ப  எல்லாம்   மல்லிப்பூவும் , அல்வாவும்   நாகரீக  வளர்ச்சி  அடைந்து  புடவையும்   ,  ஹோட்டலுமா மாறியிருக்கா ..என   விரக்தியாக  பேசினாள்  சுவேதா  .

ஏன்  இப்படி  எடுத்துக்கற  ரொம்ப  நாளா   வாங்கித் தரனும்னு  நினைச்சேன்  மா  என்றான் ,

நான்  உங்க பொண்டாட்டி தானே  வேறமாதிரி   பொண்ணு  இல்லை தானே என்றாள்  .

அறைஞ்சன்னா   என்ன  பேச்சு  பேசற  என  கோபப்பட்டான்  பிரலீன் .

பின்ன  என்னங்க   எனக்கு  உடம்பு  சரியில்லைன்னா   துடிக்கறீங்க  , டாக்டர்  கிட்ட  அழைச்சிட்டு   போறீங்க  , என்னை  பொத்தி  பொத்தி  பாத்துக்கற  உங்களுக்கு   என்னை  அடிக்க  உரிமை இல்லையா

ஸ்விடச்  போட்டா  மாதிரி   சிரிக்க நாம  ஒன்னும்  ரோபோ  இல்லீங்க   , உணர்வுகளின்  குவியல்தான்  மனிதன்  .சகஜ நிலைக்கு  வர கொஞ்சம்  நேரமாகும்  என   கொட்டித்  தீர்த்தாள்  சுவேதா  .

சரி  புடவையை  வாங்கிக்க  மா  என்றான்  பிரவீன்  .

சாரிங்க  வேணாம்ங்க  இனிமேலும்  சண்டை  வந்தா   யார்  பக்கம்  நியாயம்று   யோசிககத்  தோணாது   , ஒரு  புடவை  வாங்கிக்  கொடுத்தா     சரியாயிடும்னு       உங்க   மனசு   நினைக்கும்  , அதனால” புடவையை  திருப்பி ,கொடுத்துடுங்கன்னு   உணர்வுப்  பூர்வமாக  சொன்னாள்  சுவேதா .

அடிப்பாவி  , சென்னையில    துணிஎடுக்கறதே  பெரிய விசயம்  அது வேற திருப்பி தரனும்னா   நடக்கற காரியமா  என  பயந்தான் சரி   நாளைக்கு  ஆபீஸ் விட்டு  வரும்போது  கண்டிப்பாக மாத்தனும் என்று    கட்டளையிட்டாள்  சுவேதா .

குட்டிம்மா  என் மேல  கோபம்  இல்லையே  என்றான்   பிரவீன் .அதெல்லாம்  ஒன்னுமில்லை  மாமா என்று  புன்னகைத்தாள் சுவேதா .

 

 

  • சாம்பவி சங்கர் , திண்டிவனம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!