தமிழகம்

பெரம்பலூர் ஜேகே மண்டபத்தில் மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் போட்டி நடைபெற்றது.

13views
நிகழ்ச்சிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வக்ஃபு வாரிய தலைவருமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் தலைமையற்றார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்து கொண்டார்.
பெரம்பலூர் தொகுதியின் தவெக எம்எல்ஏ சிவக்குமார், பெரம்பலூர் மாவட்ட அரசு காஜி மௌலவி அப்துல் சலாம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஜமாத் உலமா தலைவர் மௌலவி முகமது முனிர், அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி எஹ்சானுல்லா, ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியை பெரம்பலூர் மக்கா மஸ்ஜித் இமாம் அப்ரால் தொகுத்து வழங்கினார்.
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஷாஜகான் ‘தவெக கட்சி தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக வாக்குறுதி அளித்ததன் பேரில்தான் நாங்கள் இந்த அரசோடு இணைந்து பயணிக்கிறோம். எங்களை சோபா மாடல் என்றெல்லாம் அழைக்கிறார்கள் இறைவன் மீது ஆணையாக நாங்கள் எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் தான் இந்த ஆட்சி நடைபெறுவதற்கு உதவி செய்தோம் எங்கள் மீது வீண் கற்பனை செய்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள், மிக நேர்மையாக இருப்பவர். யாரும் எங்கள் மீது அவதூறு பரப்ப வேண்டாம்’ என்று அமைச்சர் ஷாஜஹான் கேட்டுக் கொண்டார்.
தலைமை உரையாற்றிப் பேசிய வக்ஃப் வாரிய முன்னாள் தலைவர் அப்துல் ரஹ்மான் ‘திருக்குரான் என்பது முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து சமூகத்துக்குமானது. எனவே எல்லோரும் அதை வாசிக்க வேண்டும். மேலும் முகமது நபி அவர்களும் முஸ்லிம்களுக்கானவர்கள் மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் ரஹ்மத்துல்லாலமீன் பொதுவானவர்’ என்றார்.
பெரம்பலூர் எஸ்.எஸ். நிறுவன உரிமையாளர் சுல்தான் இப்ராஹீம் ஏற்பாட்டில் இந்த திருக்குர்ஆன் போட்டி நடைபெற்றது.ன என்பது குறிப்பிடத்தக்கது.
வி.களத்தூர் கமால் பாஷா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!