கவிதை

நிழலாகிவிட்டது ஒரு பகல்

16views
மண் வாசனை விரல் பட்டு
மொட்டுவிட்ட ரோஜாவே ….
திரையில் தலைகாட்டவைத்து உன்னை
தலையெடுக்க வைத்தவர்
எங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா…
கிழக்கே போகும் ரயிலில்
நனைந்தபடி நீ பேசியது வசனம் அல்ல
புதிய வார்ப்புகளுக்கான ஒத்திகை…
Action சொல்லி உன்னை
நடிக்க வைத்தவனை
தாவணிக்கனவுகளில் சிக்கவைத்து
உன் இயக்கத்திற்குள்
திரும்ப நடிக்க வைத்தாய்…
திரையில் கதைசொல்லி
ஜெயித்தவன் நீ…
சுவரில்லாத சித்திரங்களில்
ஆரம்பித்த உன் பயணம்
தூறல் நின்னுபோச்சு
டார்லிங் டார்லிங் டார்லிங்
மௌன கீதங்கள்
முந்தாணை முடிச்சு… என
வசூலில் பண்டிகை கொண்டாடியது
டூரிங் டாக்கீஸ் களுக்கெல்லாம்
நீ வசூல் சக்கரவர்த்தி…
சிட்டி செங்கல்பட்டு
வடஆற்காடு தென்னார்க்காடு – இங்கெல்லாம்
நீ Hundred பர்சன்ட் கேரண்டி …
இறந்து 16 நாள் ஆவதற்குள்
குருநாதரை பார்க்க புறப்பட்டு விட்டாயா…
சினிமாவை நீ விரும்பியது ஒரு காலம்
இன்று உன்னை விரும்பி காத்திருக்கிறது சினிமா…
உன் 50 ஆண்டு கால சினிமாவில்
நீ பார்க்காத ஒரு காட்சி
இப்போது
நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம்…
Action சொல்லியவனே
Re Action இல்லாமல் இருப்பது ஏன்…
கண்ணீருக்குள் ஒளிந்து கொள்கிறது
எங்கள் பார்வை எலிகள் ….
உன் படைப்புகளுக்குள்
பதுங்கிக் கொள்கிறது
எங்கள் நினைவு பூனைகள் ….
-நாகா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!