தமிழகம்

வேலூர் மாநகர் பகுதியில் சங்கடரசதுர்த்தி முன்னிட்டு விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

18views
வேலூர் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோயில்களில் மாதம் ஒருமுறை வரும் சங்கடசதுர்த்தியில் வியாழக்கிழமை இரவு விநாயகருக்கு பால்,தயிர், சந்தனம், தேன், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் அலங்காரத்துடன் அர்ச்சனை தீபராதனை நடந்தது. வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வர சமேத ஜலகண்டேஸ்வரர். பாகாயம் விநாயகர் ஆலையம், சங்கரன் பாளையம் விநாயகர் ஆலையம், காட்பாடி ஓடைப்பிள்ளையார்கோயில், சித்தூர் பஸ் நிலையம் ஸ்ரீ ஐயப்பன் ஆலையம், வள்ளிமலை ரோடு விநாயகர், செங்குட்டை விநாயகர் கோயில் உள்ளிட்ட விநாயகர் கோயிலில் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பின் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!