தமிழகம்

பரமக்குடியில் பறம்பைப் பைந்தமிழ்ப் பேரவை தொடக்க விழா

78views
பரமக்குடி :
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பறம்பைப் பைந்தமிழ்ப் பேரவை 25.05.2026 திங்கட்கிழமை அன்று தொடக்க விழா நடந்தது. இந்த கூட்டத்தில் நிறுவனராக தமிழ்மாமணி முதுவை ஹிதாயத்தும், கௌரவத் தலைவராக மானுடப் பிரியனும், தலைவராக கவிஞர் இதயாவும் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக உரப்புளி ஜெயராமன், தமிழ்ச் செம்மல் நீ.சு.பெருமாள் மற்றும் தமிழ்மாமணி பொற்கிழிக் கவிஞர் இளையான்குடி ஹிதாயத்துல்லாவும், பொதுச் செயலாளராக திருநீலகண்ட பூபதியும் தேர்வு பெற்றனர். இணைச் செயலாளர்களாக இரா.சக்தி, அ.தமீம், அரோ கவிப்பிரியனும், பொருளாளராக கவிஞர் சோலைராஜாவும், செயற்குழு உறுப்பினர்களாக திரு.தண்டாயுதபாணி, சிவகுருராஜா, அன்வர் ராஜா இந்திரஜித், துரைப் பாண்டியனும் தேர்வு செய்யப்பட்டனர்.
மகளிர் பிரிவு தலைவராக செந்தாமரைச் செல்வி, செயலாளராக ஆரோக்கிய ஜெயராணி, பொருளாளராக ஆமினா முஹம்மத்தும், செயற்குழு உறுப்பினர்களாக வளர்மதி, சிபிகா உள்ளிட்டோரும் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ் மொழியின் சிறப்புகளை வெளிப்படுத்துவது, இளம் பேச்சாளர்களை அறிமுகம் செய்வது, நூல்கள் வெளியீடு என பல்வேறு இலக்கியப் பணிகளை மேற்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!