தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகெங்கை அம்மன் திருவிழா, சிரசு ஊர்வலம் பக்தர்கள் வழிப்பாடு

83views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. வேலூர் மாவட்டம் மட்டுமின்றி அந்திரா, கர்நாடக பகுதியிலிருந்து பெருமளவு பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.
கடந்த ஒரு வாரமாக நடந்துவந்த திருவிழாவின் முக்கிய விழாவான சிரசு ஊர்வலம் வெள்ளிக்கிழமை விடியற்காலை சுமார் 4 மணியளவில் முத்தியாலம்மன் கோயிலிருந்து சிரசு புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோபாலபுரத்தில் உள்ள அம்மன் கோயிலை அடைந்து அங்கு சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண்திறப்புவிழா நடந்தது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சிரசுஎடுக்கப்பட்டு முத்தியாலம்மன் கோயிலுக்கு சென்றது. இன்று சனிக்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு பூப்பல்லக்கு விழாவும் நடைபெறும்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!