தமிழகம்

ஹஜ் வழிகாட்டுதல் முகாம் சிறப்பாக நடைபெற்றது

169views
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கோவை சார்பாக, கோவை மாநகரில் இருந்து புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உள்ள ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று (21 ஏப்ரல் 2026) கோவை போத்தனூர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட ஹாஜிகள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
நிகழ்விற்கு தலைமை தாங்கிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகரத் தலைவர் திரு. P.S. உமர் ஃபாரூக் அவர்கள் தனது தொடக்க உரையில், “அல்லாஹ்வின் விருந்தினர்களாக மக்கா மாநகருக்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள ஹாஜிகளுக்கான இந்த வழிகாட்டுதல் முகாம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய மார்க்க அறிஞரும் பன்னூல் ஆசிரியருமான மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள், அகண்ட திரையில் PPT Presentation மூலம் ஹஜ் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மாலை வரை நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் உரைகள், நடைமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
நிகழ்வில் கலந்து கொண்ட ஹாஜிகள், இந்த முகாம் மிகவும் பயனுள்ளதாகவும், முறையாக திட்டமிடப்பட்டதாகவும் இருந்தது என தெரிவித்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!