102views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
அணுகுண்டு வெடிகள் இல்லை…
ஆடம்பர ஆர்ப்பாட்ட
வெற்றுக் கூச்சல்கள் இல்லை…
ஒரு வத்திக்குச்சிதான்
சதி சூதுகளின்
மொத்தக் குச்சிகளையும்
வெத்துக்குச்சியாக்கி விட்டது…
ஒரு தாள் எரித்த
அந்தச் சாம்பலின் கருப்பு…
தமிழகம் முழுவதும்
கருப்பு பூசிக்கொண்டுவிட்டது…
ஒன்றிய அரசின் மேல் கருஞ்சாயம் பூசி விட்டது…
தேர்தல் அலுவல்களில்
திசைக் கொன்றாய்
சிதறிக் கிடந்த
வெவ்வேறு புறத் தலைகளையும்
ஒருசேரத் திருப்பிய அதிசயம்…
மாதர்கள் போர்வை போர்த்தி…
சூதர்கள் போட்ட சதித்திட்டம்…
தொகுதி வரையறை என்ற பெயரில்
வரன்முறையற்ற
வெறியாட்டக் கும்பல்
தட்டி வைக்கப்பட்ட கட்டம்…
குப்புறக்கிடந்த இறையாண்மையின்
மூன்று சிங்கங்களும்
பத்தாண்டுகளுக்கு பிறகு
மீண்டும் பார்த்து
புன்சிரித்துக்கொண்டன…
ஆரிய மாயர்களின்
சங்கறுத்த
கருப்புச் சட்டை பெரியாரின்
அண்ணா கலைஞரின்
வழிவந்த கலகத் தலைவன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்…
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
ஒரு புத்தெழுச்சி…
இணைய மாட்டார்களா என்றிருந்தவர்கள்
இணைந்த புரட்சி…
குரலோட்டுகளைக் கொண்டு
குதூகலித்த கொள்ளைக்கும்பலை…
இனி விரலோட்டுகளை கொண்டு
விரட்டி அடிக்கலாம் என்பதற்கான
ஆரம்ப அத்தியாயம்…
பழைய திராவிடத்தின்
பழைய படங்கள்தான்…
ஆனால் திராவிடத் தளபதியும்
தலைவரும் கைகோர்த்தவர்களும்
புதிய திராவிடத்தின் புத்தொளிகள்…
சனாதனக் கூடாரங்களின் மேல்
எறியப்படும் எரிகொள்ளிகள்…
இனி தேசமெங்கும்
இந்தத்தீ பரவும்… பரவட்டும்…
add a comment






