தமிழகம்

வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற கௌரவ தலைவர் சி.ராஜவேலு

101views
வேலூர் வள்ளலாரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் மாநில கௌரவ தலைவர் சி.ராஜவேலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அரசு ஊழியர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழக அரசு விரிவான அறிக்கை வெளியிட வேண்டும், பல்வேறு துறைகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கெளரவ தலைவர் தாண்டவ மூர்த்தி, பிரச்சார குழு தலைவர் பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் முனுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!