134views
கற்றதனால் வந்துதித்த பயனாய் விளையும்
காலத்தோடு ஒருங்கிணைந்த பயணம் கைகூடும்
கோட்டினை நீட்டிடவே கோலமகள் வந்துதித்தாள்
கூடிடும் குவலையம் தன்னில் முதன்மையாக
வாடிடும் மனமதில் செம்மையும் தேறும்
சாடிடும் கல்லும் குலச்சாமி ஆகும்
பாடிடும் பாட்டும் என்னிலை கூறும்
பண்பான பகட்டும் தேவையென தெளியும்
அன்பான குடும்பம் தன்னில் மிளிரும்
ஆசையின் அளவினை அறிந்தே நிற்கும்
இன்பம் துன்பம் சமமாய் காணும்
ஈதல் ஒன்றே உந்தும் கடமை
சிவ நடராஜன்
சென்னை
add a comment






