புதுடில்லி: தமிழகத்தில் நிவர் மற்றும் புரவி புயல் பாதிப்புகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரணநிதியில் இருந்து ரூ.286,91 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட, தமிழகம், ஆந்திரா, பீஹார், புதுச்சேரி மற்றும் ம.பி., மாநிலங்களுக்கு கூடுதல் நிவாரண தொகையாக ரூ.3,113.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில், தமிழகத்திற்கு நிரவி புயல் பாதிப்பிற்கு ரூ.63.14 கோடியும், புரெவி புயல் பாதிப்புக்கு ரூ.223.77 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆந்திராவிற்கு ரூ.280.78 கோடியும், பீஹாருக்கு ரூ.1,255.27 கோடியும், ம.பி.,க்கு ரூ.1,280.18 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இயற்கை பேரிடர் ஏற்பட்ட உடன், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோரிக்கை வைக்கும் முன்னரே, அதிகாரிகள் குழுவை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பாதிப்புகளை ஆய்வு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.