கவிதை

எது யாருக்கான சொற்கள்

42views
எது எது யாருக்கான சொற்கள்
என்று எடுத்துப் பார்த்தே
பேசிப் பழகிவிட்டோம்
ஆளுக்கொரு சொற்களென
அனைவருமே வகுத்துக் கொள்கிறோம்
சில சொற்களை கவிதையாக்குகிறோம்
சில சொற்களை
காதலாக்குகிறோம்
சில சொற்களை
கதைகளாக்குகிறோம்
இன்னும் சில வற்றை
காவியமாக்கு கின்றோம்
இப்போதும் சொற்களை
இனிமையாக்கினோமா எனில் சந்தேகம்தான்…
இதழ்கள் விரிக்கும் சொற்கள்
செவிகளோடு நிற்பதில்
பெருமையல்ல
இன்னும் சற்றேயிறங்கி
இதயத்தையும் சேரட்டும்
சொற்கள் செவிக்கானதல்ல
இதயத்திற்கானது…
இரா.சிவசங்கரன்
சென்னை.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!