தமிழகம்

வேலூர் அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயில் மாசி பிரம்மோற்சவ தேரோட்டம் அரோகரா என்ற பக்தர்களின் கோஷங்களுடன் துவக்கம்

109views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் பிரசித்திப் பெற்ற வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. கடந்த 21-ம் தேதி மாசி மாத பிரம்மோற்சவம் துவங்கியது.  முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை துவங்கியது. முருகன், வள்ளிதெய்வானைக்கு அரோகரா பக்தர்களின் கோஷத்துடன் தேரோட்டம் துவங்கியது.
பக்தர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். வேண்டுதல் நிறைவேற உப்பு மிளகு தேர் மீது வீசப்பட்டது.
இந்த 4 நாட்கள் தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நிறைவுபெறும். செவ்வாய்கிழமை காலை வள்ளித்திருமணம் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தில் வேலூர், இராணிப்பேட்டை மாவட்டம், ஆந்திரா, கர்நாடகவிலிருந்து பக்தர்கள் வந்தனர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, விழா கமிட்டியினர், அறங்காவலர் தலைவர், திருக்கோயில் எழுத்தர்ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!