243views
தயானி தாயுமானவன்
இரசிக்கத் தக்கக் காட்சிகள் நமக்குப் பிடித்தமான ஹுரோ நிவின் பாலி அவர்கள். ஹுரோயின் ரியாசிப்பு அவர்கள் இந்தப் படத்தை எடுத்த அகில் சத்யன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
நூறாயிரம் பேய்களை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில் ஒரே ஒரு பேயின் மன ஓட்டத்தை வைத்து கதையை அழகாக நகர்த்திச் செல்லும் பாங்கு ஒரு தெளிவான கதையோட்டம்.
அதே நேரத்தில் மக்களின் மனதில் மூட நம்பிக்கையை விதைக்காமல் அவர்களின் வாழ்வியல் முறைமைகளில் இறைவனும் வாழ்வதற்கான பணம் ஈட்டும் ஒரு தொழிலில் எவ்வாறு பகடையாகிறார் என்பதை பட்டவர்த்தனமாக சொல்லிருக்கிறார்.
நிவின்பாலி ஒரு கிடாரிஸ்ட் கலைஞர். சினிமா வாய்ப்புக்காக நகரத்தில் வாசம் செய்யும் ஒரு கேரள பூர்வீக குடும்பத்தைச் சேர்ந்தவர்.
வாய்ப்புகளற்ற நிலையில் தன் ஊருக்கே திரும்பும் நிவின்பாலிக்கு தன் உறவினர் அஜ்ஜி வர்கீஸ் மூலம் பூஜை புனஸ்காரங்களை செய்து தன் தேவைக்கான பணத்தை சம்பாதிக்க வேண்டிய நிர்பந்தம். அவர் இளமையில் கற்ற மந்திரங்கள் அவருக்கு கை கொடுக்க அதற்குப் பிறகு வரும் காட்சிகளில் அஜ்ஜி வர்க்கீஸின் நடிப்பு அட்டகாசம். நகைச்சுவையில் பிச்சி உதறும் காட்சிகள் இரசிகர்களுக்கு அருசுவை விருந்தாகும்.
கடவுள் நம்பிக்கையற்ற ஒரு ஹீரோ பணம் சம்பாதிக்க சென்ற வேகத்தில் பேயை அப்புறப் படுத்தும் மந்திரங்களோடு கதை சூடு பிடிக்கிறது. புகை மூட்டமின்றி அலறல் இன்றி ஒரு பேயை அறிமுகம் செய்த இயக்குனர் அகில் சத்யனுக்கு ஒரு அப்ளாஸ்.
பிறகு வரும் காட்சிகளில் ஹீரோயின் ரியாசிப்பு உணர்வுப்பூர்வமாக பக்கத்து வீட்டு பெண் போலவே மனதில் இடம் பிடிப்பது மட்டுமல்ல நல்ல எதிர்காலம் உண்டு நடிப்பில்.
உண்மையான காதல் ஆன்மாவின் பந்தம் அது பார்க்காமல் கூட பரிச்சயமாகும் தூரம் ஒரு பொருட்டல்ல. தான் யார் என அறியும் தருணம், உலகம் ஹீரோ வை உலகம் இசையினால் கொண்டாடும் போது ஹுரோ ஒரு அமைதியான குளம் போல ஒரு ஜென் மனநிலைக்கு மாறியிருப்பார். திரைக்கதையில் கடைசிக் காட்சியாக காதலை ஒப்புக் கொண்டத் தருணம், பெண்மை காதலில் எதைக் கொண்டாடுகிறது என்பதை இரசிகர்களுக்கு கடத்தியிருக்கும் விதத்திற்காக இயக்குனர் அகில்சத்யனுக்கு பாராட்டுகள்.
பேய்ப்படங்களை எடுத்து குழந்தைகளை பயமுறுத்தும் அதிரடி இயக்குனர்கள் இந்தப்படத்தை பார்த்தேனும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளட்டும். கோடிகளில் பணத்தை கொட்டி கரியாக்குவதை விட்டு ஒரு வைரக்கல்லை ஒளிரச் செய்யுங்கள்.
இளம் தலைமுறைக்கு அருமையான விருந்து. புதுமுக இயக்குனர்களுக்கு காட்சியமைப்புகள் வரமாகும். மீதியை வெள்ளித் திரையில் காண்க.
மதிப்பெண் 80/100
add a comment






