93views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
உலகெங்கும்
அன்பு பொழியும் ஆலயங்கள்…
வம்பு கொண்டு
ஆலயங்களையே பொழித்தீர்களே
வம்பர்களே…
வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தவர்
மேலும் வருந்துவதற்காகவா
இந்த இந்தக் கலவரங்கள்…?
அப்பமும் வைனும்தான்
அவர்களின் பிரசாதம்
உங்களுக்காக
சாணமும் கோமியமுமா
தர முடியும்…?
பெரும்பான்மையினரின்
கனிவும் கருணையும்தானே
சிறுபான்மையினருக்கான
பாதுகாப்புக் கவசங்கள்…
நீங்கள் கடவுளின்
பாதுகாப்புக் கவசங்களையே
கடத்துகிறீர்களே…
முருகனுக்கு
மலைக்குறத்தியும்
ராமனுக்கு படகோட்டியும்
வாழ்க்கை ஆனார்களே…
உங்களுக்கு மட்டும்
சிறுபான்மையினர் என்பவர்கள்
எப்போதுமே தீட்டானவர்களா…
அன்பிருக்கும் இடமெல்லாம்
ஆலயங்கள் இல்லையா..
மனிதம் போற்றுவதுதானே
புனிதர்களின் கடமை…
புனிதங்களைச் சொல்லும்
வேதங்களின் கடமை…?
உங்களுக்கு மட்டும்
மூளைகளில்
புழு புழுத்தது எப்படி…?
தீபங்களை ஏற்றுவதுதான்
ஆலயங்களில் வழக்கம்..
நீங்களோ
கோபங்களை ஏற்றுகிறீர்கள்..
இனக்கலவர
மதக் கலவரத் தூபங்களை ஏற்றுகிறீர்கள்…
எல்லோரையும் அழித்துவிட்டு…
மனிதாபிமானத்தை
புதைத்து விட்டு…
மானுடத்தைக் கொன்றுவிட்டு…
எந்தக் கோயிலில் நீங்கள்
தீபாராதனை காட்டப் போகிறீர்கள்…?
அன்பும்
இரக்கமும் கருணையும்
அடுத்தவர் மேல் பரிவும் பாசமும்
இல்லாத தேசத்தில்
உங்கள் கடவுள் வருவானா?
add a comment






