தமிழகம்

வேலூரில் அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் சார்பில் மாமன்னர் மருதுபாண்டி சகோதரர்களின் 224-வது நினைவேந்தல் நிகழ்ச்சி

150views
இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டதால் 1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் சிவகங்கை சீமையில் மருது சகோதரர்கள் 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிசெய்தவர்கள், இவர்களின் நினைவுதினம் அக்டோபர் 24-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அரசு விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதி அம்மன் திடலில் நினைவு வேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மருது சகோதர்களின் படத்திற்கு மலர் அஞ்சலியை அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின் நிறுவன தலைவர் விஎம் அப்புபால் பாலாஜி தலைமையில் மலர் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அதிமுக மாவட்ட மாநகர செயலாளர் அப்பு, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தசரதன்,மேயர் சுஜாதா, முன்னாள் மேயர் கார்த்தியாயினி, விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் பிலிப், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் வாசு, அக்டோபர் 24 இயக்கத்தின் மாவட்ட தலைவர் சசிகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!