சினிமா

மனிதன் திரைப்படம் 38 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ரீ ரிலீஸ்

105views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த படம் ஏ.வி. எம். நிறுவனம் தயாரித்த மனிதன் படம்.
மனிதன் திரைப்படம் 38 வருடங்களுக்கு பிறகு டிஜிட்டலில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இந்த மாதம் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.  எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வைரமுத்துவின் வைரவரிகளில் சந்திர போஸ் இசையில் வெளி வந்த படம்தான் ” மனிதன்”.  ரஜினி திரை உலகிற்கு வந்து 50 வருட பொன் விழாவான இந்த வருடத்தில் ” மனிதன்” திரைப்படம் வருவதால் அவருடைய ரசிகர்கள் மிகப் பெரிய கொண்டாட்டமான தீபாவளியாக நினைக்கிறார்கள்.
அக்டோபர் 10 ஆம் தேதி ” மனிதன்” படம் ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. அதை அடுத்து பெங்களூருவில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் பி.என். புராவில் உள்ள ” புஷ்பான்ஜலி ” திரையரங்கிற்கு சென்று ரிலீசன்று காலை 6.30 மணி காட்சி போட சொல்லி தியேட்டர் மேனேஜரிடம் கேட்கிறார்கள். என்று அங்கிருந்து தகவல் வந்துள்ளதாக ” மனிதன்” படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் வினியோக உரிமை பெற்றுள்ள குருராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தினர் பெருமையாக கூறுகிறார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!