சினிமா

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும், கோர்ட் ரூம் டிராமா திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

70views
Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது.  கோர்ட் ரூம் டிராமாவாக இப்படத்தை உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், R சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில்நுட்பக் குழு விபரம் :
தயாரிப்பு – Drumsticks Productions & Zee studios
தயாரிப்பாளர்கள் – உமேஷ் குமார் பன்சால் மற்றும் வெடிக்காரன்பட்டி S சக்திவேல்
இணை தயாரிப்பு – அக்‌ஷய் கெஜ்ரிவால், விவேக் சந்தர் M
கிரியேட்டிவ் புரொடியூசர் – வினோத் CJ
எழுத்து – இயக்கம் : பிரவீன் S விஜய்
ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட்
இசை: சாம் C S
எடிட்டர்: பிரசன்னா G.K
கலை இயக்கம் : குளித்துறை ரவீஸ்
ஆடை வடிவமைப்பாளர்: ஸ்ருதி மஞ்சரி
ஆடை வடிவமைப்பு : கார்த்திக் தமிழ்வாணன்
ஒப்பனை : ராகவன்
விளம்பர வடிவமைப்புகள் : தினேஷ் அசோக்
நிர்வாக மேலாளர் : மணி தாமோதரன்
தயாரிப்பு மேலாளர் : V.R.ராம் பரத்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
ஸ்டில்ஸ் : K சந்திர மோகன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!