தமிழகம்

இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி

96views
இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி 20.08.25 மற்றும் 21.08.2025 ஆகிய இரு தினங்கள் மிக சிறப்பாக நடைபெற்றது.தென் மாவட்டங்களைச் சார்ந்த தலைசிறந்த 14 கல்லூரி அணிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. இதில் முதல் இடத்தை புது வயல், வித்யாகிரி கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை நமது கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகஉடற்கல்வியியல் கல்லூரி அணியும், நான்காம் இடத்தை இளையான்குடியைச் சார்ந்த நமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அணியும் பெற்றனர்.

இப் போட்டிகளை நமது கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இப்போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்தின் மூத்த கால்பந்து பயிற்சியாளர்கள் சிக்கந்தர், செந்தில்குமார் கலந்து கொண்டனர். மேலும்  இளையான்குடி ஸ்டார் முஸ்லிம் கால்பந்து குழுவைச் சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இளையான்குடியைச் சார்ந்த முன்னாள் கால்பந்து வீரரும் S M F C அணியின் முன்னாள் கேப்டனுமான அப்துல்லா, கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முஹம்மது முஸ்தபா அவர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் கால்பந்து மாணவர்களோடு இணைந்து, உடற்கல்வி இயக்குனர் காளிதாசன், காஜா நஜுமுதீன் மற்றும் வெற்றி ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!