தமிழகம்

காட்பாடி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல், வேலூர் விஐடி மாணவர் பரிதாபம் !!

181views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ் காசி இவர் கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய திமுக தகவல் தொழிற்நுட்ப அணி அமைப்பாளர். இவரது மகன் கிஷோர் (19). காட்பாடி அடுத்த வெள்ளக்கல் மேட்டில் உள்ள தனியார் விஐடி பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றார் கடந்த 4-ம் தேதி காலையில் பல்கலைக்கழக கல்லூரிக்கு பைக்கில் சென்ற போது காட்பாடி கிளி தாண் பட்டறை என்ற இடத்தில் முன்னால் சென்ற பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் கிஷோர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக அங்கு இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் வரும் வழியில் உயிரிழந்ததாக பரிசோதனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். கிஷோரின் மரணம் பெற்றோர் மற்றும் சக மாணவர்களிடத்தில் துக்கத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!