கவிதை

மீண்டு வருக….நீண்டாயுளுடன் வாழ்க….

122views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
எங்கள் முதல்வரே…
நீங்கள் எம்மாந்தரும்
விரும்பும் செம்மாந்தர்…
செம்மாந்தருக்குள்
சிறப்பான வேந்தர் …
பல்கலை வேந்தர்…
நீங்கள் –
அணி மகுடங்களில்
ஒரு மணி மகுடம்….
முதல்வர்களுக்குள்
ஒரு முன்மாதிரி…
மாநில அரசுகளோடு
இணங்காத ஒன்றியத்தை
அண்ணாந்து பார்க்க வைத்த
அண்ணாவின் தம்பி
கலைஞரின் மாதிரி…
ஒன்றிய இந்தியத்துக்கே
ஓர் ஆச்சரியக் குறி…
நமக்கு சாதகமாய்
வரும் தீர்ப்புகள் எல்லாம்
அறிவாலயம் பிடிக்காத
ஆரியக் கூத்துப் பட்டறை
அரைவேக்காட்டின்
தலைக்கனத்தைக்
கழற்றி வீசுகிற
தமிழ் கௌரவங்கள் …
அனைத்து மாநிலங்களையும்
ஒன்றிணைத்து
ஒன்றியத்தின்
வேர் வரைப்பாயும்
நீதியின் நெறியாசனங்கள் …
இனி –
நீதிமன்றமே உங்களுக்கிட்ட
இந்த வேந்தர் இருக்கையை
அகற்றுதல் என்பது
அவ்வளவு எளிதல்ல..
தமிழ் –
முரடனிடம்
கனிந்து பேசும் …
மூடனிடமும்
நயந்து பேசும்…
ஆத்திரக்காரனிடம் கூட
அன்பாகப் பேசும் …
ஆனால் நம்மை
சூத்திரக் காரன் என்னும்
மூத்திரக் காரனிடம்
மட்டும் தான்
மீசை முறுக்கிப் பேசும்…

சிந்து நாகரீகத்தை
முந்து நாகரீகம் தமிழின்
கீழடி தான் என்றும் நம் மேலடி…
அதை ஒரு நூலடி வந்து
எட்டிப் பிடிக்க முடியாது…

ஐயாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே
இரும்பின் இருப்பை
தக்கவைத்துக் கொண்ட
ஒரு மூத்த நாகரீகத்தை
இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய
இந்தி இருட்டுப்
பித்த நாகரீகம் வந்தா
இடறிப்பார்ப்பது?
தேனும் பாலுமாய்
கலந்தோடும் செந்தமிழ்
மொழியின்
சிறந்த நாகரிகங்களை
சாத்திரக் குடிகள் வந்தா
முனை முறிக்க முயல்வது…?
மக்களின்
எல்லாத் துறைகளிலும் இருக்கும்
மக்களோடு முதல்வர்
மக்களின் முதல்வர் எனும் திட்டம்
மக்களின் உள்ளங்களில் தேரோட்டும்…
மற்ற தேசங்களும்
அதை பாராட்டும்…
மானுடரின் இரு கைகள் போல
இரு மொழிகளிலேயே
உலகின் உயர்ந்த இருக்கைகள் இனி
அந்தந்த முதல்வர்களால்
மட்டுமே நிரப்பப்படும்…
சரித்திரத் தீர்ப்பு பெற்ற சாதனை முதல்வரே…!
வருக வருக …!
உடல் நலம் தேறி
மீண்டும் வருக..
தமிழ் ஆண்டு வருக…
வாழ்நாள்
நீண்டு வாழ்க..
எப்போதும்
வாழ்த்துகள்….!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!