தமிழகம்

வாணியம்பாடியில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மகனை கரண்டியால் தந்தை குத்தியதில் மகன் உயிரிழப்பு. நகர போலீஸார் தந்தையை கைது செய்து விசாரணை.

23views
வாணியம்பாடி : மே.4
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முருகேசன். இவர் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஸ்ரீதர்(27). இவர் கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததால் ஆத்திரமடைந்த முருகேசன் ஸ்ரீதரை வீட்டில் இருந்த கரண்டியால் நெஞ்சுப் பகுதியில் குத்தியுள்ளார். இதில் ஶ்ரீதர் படுகாயம் அடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சையிற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஸ்ரீதர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி துணை காவல்கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் வீட்டின் அருகே மறைந்திருந்த அவரது தந்தை முருகேசனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலைக்கு செல்லாமல், ஊர் சுற்றிய மகனை கரண்டியால் தந்தை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!