சினிமா

இம்மாதம் 16’ம் தேதி திரைக்கு வருகிறார் “ஆண்டவன்”!

22views
“ஆண்டவன்” இசை விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இயக்குனர் வில்லிதிருக்கண்ணன், கதாநாயகன் மகேஷ், கதாநாயகி வைஷ்ணவி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்கள்!
ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்!
எதார்த்தமான கதைக்களத்தில், வில்லியம் பிரதர்ஸ் நிறுவனம் “ஆண்டவன்” என்ற திரைப்படத்தை உருவாகியுள்ளது. இதில் கலெக்டராக கே.பாக்யராஜ் நடிக்கிறார். கதாநாயகனாக யூடியூப்பர் மகேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, டாக்டர் முத்துச்செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ், பின்னணி இசை சார்லஸ் தனா, எடிட்டிங் லட்சுமணன், நடனம் பவர் சிவா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், பிஆர்ஓ கோவிந்தராஜ். இனைத் தயாரிப்பு டாக்டர் முத்துச்செல்வம், சேலையூர் எஸ்.எஸ்.சுரேஷ். எழுத்து, இயக்கம் வில்லிதிருக்கண்ணன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!