தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல், மெட்டுக்குளம், கரிகிரி பஞ்சாயத்துக்களில் கிராம சபா கூட்டம் நடந்தது

16views
தமிழகம் முழுவதும் மே தினத்தை (தொழிலாளர் தினத்தை) அனைத்து கிராம பஞ்சாயத்தில் கிராம சபா கூட்டம் நடந்தது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து அலுவலகத்தில் கூட்டம் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்.
மெட்டுக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கீழ் மெட்டுக்குளத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் கவிதா இளங்கோ தலைமை தாங்கினர்.துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.ஊராட்சி செயலாளர் சரவணன் நன்றி கூறினார். அதேப்போல் கரிகிரி பஞ்சாயத்து கிராம சபா கூட்டத்திற்கு தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். உபதலைவர், பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!