தமிழகம்

கனிம வள கொள்ளை குறித்து ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கொந்தளிப்பு

34views
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, புத்தூர் ஊராட்சி, புத்தூர் ஏரி, பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில், இதனை கேட்டோம் என்றால் தொடர்ந்து மண்பாண்டத்திற்கு மண் எடுக்கப்படுகிறது. இதற்கு கலெக்டர் அனுமதி கொடுத்துள்ளார்கள் என பித்தலாட்டங்கள் செய்து ராட்சத அதி நவீன இயந்திரங்கள் மூலம் நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் அதிவேகமாக கனிம வள கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி நிலத்தடி நீர்மட்டத்தால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு தாசில்தார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் உட்பட கையூட்டு பெற்றுக் கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருவதாக தொடர் குற்றச்சாட்டு.
இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த உயர் பதவி ஊழியர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர் என இந்த ஊர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக கனிம வளத்தை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பொய்கை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!