தமிழகம்

தேசிய திறனாய்வுத் தேர்வில் சாதனை படைத்த இளஞ்செம்பூர் மாணவி

33views
முதுகுளத்தூர் :
முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்து வருபவர் ரா. ரசிகா என்ற மாணவி ஆவார். இவர் 2024-2025 ஆம் கல்வி ஆண்டில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
அந்த மாணவிக்கு மாதம் ரூ. 1,000 வீதம் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ. 48 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். சாதனை படைத்த மாணவிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் எஸ். கார்த்திகேயன், ஆசிரிய, ஆசியைகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதுகுளத்தூர்.காம் சாதனை மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!