தமிழகம்

கனவு தொழிற்சாலை புத்தக வெளியீடு

35views
எழுத்தாளர் மடிப்பாக்கம் வெங்கட் எழுதிய கனவு தொழிற்சாலை என்ற புத்தக வெளியீடு 6.4.2025 அன்று போரூர் போம்ரா ஹியூஸ் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
திரு. அரவிந்த் கிருஷ்ணனின் இறைவணக்கப்பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. விஜி. ஆர் கிருஷ்ணன் வரவேற்புரை ஆற்ற, திருமதி கீத்மாலா ராகவன் நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார்.

எழுத்தாளர் திரு. சப்தரிஷி லா.ச.ரா. அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு பாராட்டி பேசினார். டாக்டரும், எழுத்தாளருமான பாஸ்கரன் ஜெயராமன் அவர்கள் நூல் அறிமுக உரை வழங்க, எழுத்தாளர்கள் உங்கள் ரசிகன் திரு ரவி ரவிபிரகாஷ், என்.சி. மோகன்தாஸ், சங்கரன் அஸ்வதி, வெ. தயாளன், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனர் திரு. மஹாதேவன் சீனிவாசன் மற்றும் திரு. என். ஆர். சம்பத் போன்றவர்கள் வாழ்த்தி பேசினார்கள்.
மலர்வனம் மின்னிதழ் சார்பாக ராம்கி அவர்கள் வெங்கட் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.

மடிப்பாக்கம் வெங்கட் ஏற்புரையில் நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். திரு. டி.என். ராதாகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான எழுத்தாளர்களும், நண்பர்களும் கலந்து கொண்டார்கள். ஸ்ரீராம நவமி அன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றதால் அனைவருக்கும் இரவு விருந்துடன், பானகம் மற்றும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் வடையும் வழங்கப்பட்டது.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!