தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் 40 சவரன் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையில் ஈடுப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 7 பேர் கைது!!

152views
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தை சேர்ந்தவர் ராஜா, இவர் இதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகின்றார். கடந்த 20-ம் தேதி மகளின் திருமணத்திற்காக துணி எடுக்க சென்னை சென்று அன்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட 40 சவரன் தங்க நகை, 500கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
புகாரின்பேரில் காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் நகை திருடியதிருவண்ணாமலை அடுத்த பெருமாள் நகர் வெங்கடேஷ் (36)சேலம் மாவட்டம் சின்னகல்வராயன்மலை சரவணன்(24) ஆரணி பாரதி (34) வேலூர் சேண்பாக்கம் தியாகராஜன், திருவண்ணாமலை மாவட்டம் சதீஷ் (30) கோபி (39) சேலம் புஷ்பராஜ் (27) ஆகிய 7 பேரையும் கைது செய்து 36 சவரன் நகையை கைப்பற்றினர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!