கட்டுரை

பேனாக்கள் பேரவை – எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவுடன் உரையாடல் – 09 03 25

112views
முனைவர் தென்காசி கணேசன்
சென்னை 92
அலைப்பேசி எண் : 94447 94010
பேனாக்கள் பேரவை நிகழ்த்திய நேற்றைய  சந்திப்பு மிக அருமை. சாதனை படைத்த ஆளுமையாக இருக்கின்ற எழுத்தாளர் சிவசங்கரி அம்மா அவர்கள் நேற்று வந்து  இருந்தது மிகப்பெரிய சிறப்பு. இந்த ஒரு அற்புதமான நிகழ்வை வடிவமைத்து ஏற்பாடு செய்திருந்த திரு என் சி மோகன் தாஸ் மற்றும் பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும்  எனது மனமார்ந்த நன்றிகள் பாராட்டுக்கள்
கேள்விகளை கேட்க வைத்ததும், திருமதி சிவசங்கரி அம்மா அவர்களின் அனுபவப் பதில்களும் நேற்று வந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.
பெற்றோரை பார்த்து நான் கற்றுக் கொண்டேன்.  இந்த நாட்டை பற்றி பேசும்போதும் சரி,  சுய ஒழுக்கம் எப்படி ஒரு கணவன் மனைவி இருக்கணும்,  மது பழக்கம் இல்லாத வாழ்க்கை என எதார்த்தமாக அவர்களின் பதில்கள் இருந்தன.  ஒரு ஆளுமை என்பதை  விட ஒரு  தாய் நிலைமையில் இருந்து பேசியது மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
எத்தனை தகவல்கள் ? எவ்வளவு  பரிமாணங்கள் !  வடநாட்டில் நடந்த முகலாயப் தாக்கம்  , தென்னாட்டில், குறிப்பாகத் தமிழகத்தில் இல்லை . அவர்களின் வேதனை, துயரம் இவற்றை , அவர்களின் கலாச்சாரத்தைப் பற்றி என தான் தேசம் முழுவதும் பயணித்த, கேட்ட அனுபவங்களை அழகாகச் சொன்னார்கள்.
அதேபோல, தனக்கு 82 வயது என்றாலும், வயசாச்சு வயசாச்சுன்னு சொல்லவும் வேண்டாம். குறைந்த வயது என்று கொண்டாடிக்கொள்ளவும் வேண்டாம் என்று கூறியதுடன், ஒருவருக்கு 3 வித வயது உண்டு – பிறந்த தேதி வைத்து வயது (காலண்டர் வயது) ,  உடலின்  வயது மற்றும் மனத்தின் வயது. இது மிக அற்புதமான, முக்கியமான, அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்.
40 வயதான  ஒருவரால்  படி ஏற முடியாது என்றபோது, அதுவே உடலின் வயது.  மனத்தால் இளமை, நல்ல எண்ணங்கள், ஆன்மிகம், உதவி செய்யும் குணம், நன்றி – இவை ஒருவனை ஆரோக்கியமாக வாழவைக்கும்.
காலையில் எழுந்தவுடன், கடவுளுக்கு நன்றி சொல்வதுடன், தனது உடம்பிற்கு, கால் கைகளுக்கு, கண்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று புதிதாய் பிறந்தோம் என்ற பாரதியின் வார்த்தைகளை போல தினமும் காலையைத் தொடங்கினால், உடலும் மனமும் உற்சாகம் அடையும்.
இலக்கியம் என்பது கண்ணாடி போல என்றால் வெறுமனே முகத்தின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, கண்ணாடி மூலம், நமது   முகத்தில்  இருக்கிற தேவையற்றது எல்லாம் சரி பண்ணிக் கொள்வதுபோல், படைப்பாளியின் இலக்கியம் சமுதாயத்தில் இருக்கிற குறைகளை குற்றங்களை அவதூறுகளை சரி செய்ய வேண்டும் அப்படின்னு சொன்னது மிகச் சிறப்பு.
இந்திரா காந்தி ராஜீவ் காந்தி வாஜ்பாய், சிவாஜி கணேசன்,  ஜெயலலிதா போன்ற பல ஆளுமைகளை சந்தித்து இருக்கிறார்கள். இவ்வளவு சாதனைகள் செய்திருந்தாலும்,
தன்னைப்பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளாமல்,  சமுதாயத்துக்கும் ஒரு குடும்பத்திற்கும் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறியது அழகு,
எனது கேள்விக்கும்,   ரோல் மாடல் யாரும் கிடையாது , பெற்றோரே ரோல் மாடல் என்று பதிலைத் தந்தது மிகச் சிறப்பு.
நல்ல பாசிட்டிவ் வைப்ரேஷனோட சந்தோசமாக இருக்க வேண்டும்,  எல்லாரிடமும்  அன்பாக நடந்துகொண்டு,  உடம்புக்கும் இந்த தேசத்துக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறியது நல்ல முத்தாய்ப்பு.
மொத்தத்தில் நல்ல நிகழ்வு! நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது.

ஒரு ஞாயிறு காலை நல்ல பொழுதாகக் கழிந்தது.  அதற்கு அப்புறம் ருசியான  மதிய உணவு.  எல்லாம் சேர்ந்து மிக சிறப்பாக நிகழ்வை அமைத்த திரு மோகன்தாஸ்,   வெங்கட் , ரவி நவீனன் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றி.

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!