தமிழகம்

காட்பாடியில் 1வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு பௌர்ணமி முன்னிட்டு அன்னதானம் வழங்கல்!

40views
வேலூர் மாநகராட்சி, 1வது மண்டலம் காட்பாடி மற்றும் 1வது வார்டு கல்புதூர் திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு பௌர்ணமி முன்னிட்டு ஏழை, எளிய பொது மக்களுக்கு சுமார் 1000 பேருக்கு இலவசமாக அன்னதானம் வழங்கினார் . பிற்பகல் 12:30 மணியிலிருந்து 1:30 மணி வரை இடைவிடாது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்கள், சாலையோரம் வசிப்பவர்கள், சாப்பாட்டிற்கு வழி இல்லாமல் சிரமப்படுபவர்கள் கூலி வேலை செய்யும் நபர்கள் வரிசையில் நின்று காத்திருந்து இந்த அறுசுவை உணவை வாங்கிக்கொண்டு தங்களது பசியை இளைப்பாற்றிக் கொண்டனர். இந்த 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.அன்பு அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் மாதம்தோறும் இலவசமாக ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை தொடர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அவருடன் ஆசிரியர் சச்சிதானந்தம், மற்றும் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் அந்த அன்னதானத்தை 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.அன்பு தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறார் என்பதையும் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அறுசுவை உணவை வாங்கி உட்கொண்ட ஏழை, எளியவர்கள் இவரது பணி தொடர வேண்டும் என்று மனதாரவும், வயிறாரவும் வாழ்த்தி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!