தமிழகம்

மதுரை முனவ்வரா மகளிர் அறநிலைய 56-வது ஆண்டு விழா!

35views
10.02.2025 திங்கள் மாலை முதல் இரவு வரை,‌ முனவ்வரா மகளிர் அறநிலைய 56 – ஆம் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி, மதுரை கோ. புதூர் மூன்று மாவடியிலுள்ள மேற்கண்ட அறநிலைய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் மவ்லானா பி கே என் அப்துல் காதிர் ஆலிம் விழாவுக்கு தலைமை தாங்கினார்.‌
அறநிலைய நிர்வாகக் குழு தலைவரும் மூத்த மார்க்க அறிஞருமாகிய மவ்லானா முஹம்மது முஹ்யித்தீன் மதனீ வரவேற்புரை ஆற்றினார்.
மதுரை மாவட்டம் மாநகர் சார்ந்த பல்வேறு உலமா பெருமக்கள், மதுரை சுங்கம் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவைச் சார்ந்த ஹாஜி நஜ்முத்தீன், மதுரை மாநகர் சட்டத்துறை வழக்கறிஞர் நஜ்முத்தீன், பெரியகுளம் தொழிலதிபர்கள் ஹாஜி நவ்ஷாத் அஹ்மது டாக்டர் சலீம், ஹாஜி ரஷீது அஹ்மது, ஜனாப் மாமன் முகைதீன், மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரி மேனாள் தாளாளர் மற்றும் செயலாளர் ஹாஜி ஜமால் முஹ்யித்தீன், தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த டாக்டர் தர்வேஷ், பொறியாளர் ஹாஜி தஸ்லீம், ஹாஜி ஷாஹீன், ஹாஜி முகம்மது ஜான், கவுன்சிலர் அன்வர், கட்டுமான நிறுவன அதிபர் பொறியாளர் ஹாஜி நாசர்கான், மதுரை நியோ அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத் திரவியக் காவலர் ஹாஜி மூசா இப்ராகீம்ஷா, மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் சங்கைக்குரிய நிர்வாகிகள், குர்ஆனியா புக் டிப்போ அதிபர் மவ்லானா ஹாபிஸ் ரஷீது அஹ்மது ஆலிம், சமுதாய பிரமுகர்கள், பல்வேறு பகுதிகளின் முஸ்லிம் ஜமாஅத்தார்கள், பொதுமக்கள் மற்றும் ஏராளமான பெண்மணிகள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, ஏழை எளிய முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியுடன் பொதுப்படிப்பு, உணவு உடை உறையுள் மற்றும் மருத்துவம் யாவும் முற்றிலும் இலவசமாக வழங்கி, கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த மத்ரசா தொடர்ந்து ஆற்றிவரும் மகத்தான மகளிர் கல்வி சேவையையும், அதன் தலைமை நிர்வாகி மவ்லானா முஹம்மது முஹ்யித்தீன் மதனீ, அவர் மூத்த மைந்தர் முஹம்மது மதனீ,அவர் குடும்பத்தினர் மற்றும் நிர்வாகக் குழுவினரையும் வெகுவாகப் பாராட்டினர்.
மாணவிகளின் மார்க்கக் கல்வி மற்றும் பொதுக் கல்வி அறிவுக்கும் சொற்பொழிவுக்கும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!